New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/22/QT6eslYNl3quEuYu0QCM.png)
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தனது தாயை நினைவுகூர்ந்து பேசும்போது நா தழுதழுக்க கண்ணீர் சிந்தி பேசினார்.
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தனது தாயை நினைவுகூர்ந்து பேசும்போது நா தழுதழுக்க கண்ணீர் சிந்தி பேசினார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்ப சொந்த நிதியில் ரூ.12 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வளர்தமிழ் நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலையும் திறந்து வைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக சிவகங்கை சென்றுள்ளார். சிவகங்கையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக, ராஜீவ் காந்தி சிலை அருகே பாரம்பரிய மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டத்துடன் முதலமைச்சரை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்திற்குள் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சார்பில் 12 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட வளர்தமிழ் நூலகத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
அழகப்பா பல்கலைக்கழக அலுவலகக் கட்டடத்தில், திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து, முதலமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அழகப்பா பல்கலைக்கழகத்தில் வளர் தமிழ் நூலகத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்ததைத் தொடர்ந்து பேசிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தனது தாயை நினைவுகூர்ந்து பேசும்போது நா தழுதழுக்க கண்ணீர் சிந்தி பேசினார். நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் பேசுகையில், “எனது தாய் லட்சுமி ஆங்கிலம் மற்றும் தமிழ் நன்கு தெரிந்தவர். என்னை இளம் வயதிலேயே தமிழ் மற்றும் ஆங்கில நூல்களைப் படிக்கத் தூண்டியவர் அவர்தான். அவருக்கு என் நன்றி கலந்த அஞ்சலி” என்று கூறும்போது நா தழுதழுத்து உடைந்து அழுதார்.
தொடர்ந்து பேசிய ப.சிதம்பரம், “அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் வளர் தமிழ் நூலகத்தை நிறுவ கிடைத்த வாய்ப்பு எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த பெருமை. தமிழ் வாழ வேண்டும் என்றால் 9 கோடி தமிழ் மக்கள் தமிழைப் பேசவும், எழுதவும் வேண்டும். டிஜிட்டல் முறையில் தமிழ் வளர வேண்டும். தமிழ், கணினித் தமிழாக வேண்டும்” என்று பேசினார்.
அழகப்பா பல்கலைக்கழகத்தில் வளர் தமிழ் நூலகம் மற்றும் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றுப் பேசிய கவிஞர் வைரமுத்து, “மேகம் அழுவது உண்டு அதற்குப் பெயர் மழை. இரவு கூட அழுவது உண்டு அதற்குப் பெயர் பனி. சூரியன் அழுது பார்த்ததுண்டா.. சிதம்பரம் கண் கலங்கியபோது நான் இன்று அதைப் பார்த்தேன். ப.சிதம்பரம் பெருமையை வெளிக்காட்டுவதை விரும்பாதவர், இலக்கிய ரசிகர்” என்று ப.சிதம்பரத்தைப் பாராட்டிப் பேசினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.