விலைவாசி உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தை ராமர் கோவில் அடிக்கல் நாட்டப்பட்ட தினத்துடன் தொடர்புபடுத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்களை ப. சிதம்பரம் நிராகரித்தார். மேலும், போராட்டத்திற்கான தேதியை முடிவு செய்தபோது அடிக்கல் நாட்டிய நாளின் ஆண்டுவிழா எங்கள் மனதில் இல்லை என்று ப. சிதம்பரம் கூறினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் நாடாளுமன்றம் செயலிழந்து திடீரன முடிவுக்கு வருவதாகவும், இந்தியாவில் ஜனநாயகம் மூச்சுவிடமுடியாமல் திணறுவதாகவும், கிட்டத்தட்ட அனைத்து அமைப்புகளும் அடக்கப்பட்டு அல்லது கைப்பற்றப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
ராஜ்யசபா தலைவர் எம்.வெங்கையா நாயுடு கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை அமலாக்கத்துறை இயக்குநரகம் விசாரணைக்கு அழைத்ததில் இருந்து பாதுகாக்கத் தவறிவிட்டார் என்றும் ப.சிதம்பரம் கூறினார்.
ப. சிதம்பரம் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், விலைவாசி உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தை ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டிய நாளுடன் தொடர்புபடுத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்களை நிராகரித்தார். மேலும், போராட்டத்திற்கான தேதியை முடிவு செய்தபோது அடிக்கல் நாட்டிய நாளின் ஆண்டுவிழா எங்கள் மனதில் இல்லை என்று ப. சிதம்பரம் கூறினார்.
துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற இருந்ததால், அனைத்து எம்.பி.க்களும் வெள்ளிக்கிழமை டெல்லியில் இருப்பார்கள் என்பதை கணக்கில் எடுத்துகொண்டால் தேதியை முடிவு செய்தது சரியாக இருக்கும். மேலும், யாரையாவது குற்றம் சாட்டுவதற்கு ஒருவர் எப்போதும் லாஜிக்காக குற்றம்சாட்டுவார்கள் என்றும் அவர் கூறினார்.
“ஆகஸ்ட் 5, 2019 அன்ரு ஜம்மு காஷ்மீர் சட்ட விரோதமாக துண்டாடப்பட்டது! ஒரு தீவிரமான பிரச்சினையை விவாதிக்கும்போது இவற்றை விட்டுவிடுவோம்” என்று சிதம்பரம் கூறினார்.
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் ஜிஎஸ்டி உயர்வு போன்ற பிரச்சனைகளுக்காக காங்கிரஸ் தலைவர்கள் கருப்பு உடை அணிந்து நடத்திய போராட்டத்தை, 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக என்று அமித்ஷா தொடர்புபடுத்தி கூறுவது அக்கட்சியினரை சமாதானப்படுத்தும் அரசியல் என்று கூறினார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறையால் விசாரணைக்கு உள்ளாகி வரும் காங்கிரஸ் கட்சியின் தலைமையை காப்பாற்றும் முயற்சியாக ஆகஸ்ட் 5-ம் தேதி காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தியதாக பாஜக தலைவர்களின் குற்றச்சாட்டை ப. சிதம்பரம் நிராகரித்தார்.
“ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடந்த போராட்டம் பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் அக்னிபத் ஆகியவற்றுக்கு எதிராக மட்டுமே நடத்தப்பட்டது என்று நாங்கள் அறிவித்து, தெளிவுபடுத்தியிருந்தோம். இந்த அறிவிப்பை கேட்காதவர்களாகவும் பார்க்காதவர்களாக காட்டிக்கொண்டால் நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்று ப. சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சம்மன் அனுப்பப்பட்ட தலைவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் அளவுக்கு வலிமையானவர்கள் என்றும், அவர்களுக்கு கட்சியின் முழு ஆதரவு உள்ளது என்றும் ப. சிதம்பரம் கூறினார்.
கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அமலாக்கத்துறை இயக்குநரகத்தால் மல்லிகார்ஜுன் கார்கே அழைத்தது பற்றிய கேள்விக்கு, சபை அமர்வின்போது, அமலாக்க இயக்குநரகம் அழைக்கப்படுவதில் எதிர்க்கட்சித் தலைவரை சபாநாயகர் பாதுகாக்கத் தவறியது ராஜ்யசபாவிற்கு சோகமான நாள் என்று ப. சிதம்பரம் கூறினார்.
“அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் திருமதி நான்சி பெலோசி, தைவான் விஜயத்தின் போது அமெரிக்க அரசாங்கம் வழங்கிய ஆதரவை ஒப்பிடுக. நிர்வாகக் கிளையானது சட்டமன்றக் கிளையின் அதிகாரத்தையும் சுயாட்சியையும் மதித்தது. அமெரிக்க அரசாங்கம் தனது விமானம் தாங்கி கப்பலை தைவானுக்கு அப்பால் உள்ள கடல்களுக்கு அனுப்பியது மற்றும் விமான ஆதரவையும் தயார் நிலையில் வைத்துள்ளது,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
“அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் திருமதி நான்சி பெலோசி, தைவான் வருகையின்போது அமெரிக்க அரசாங்கம் வழங்கிய ஆதரவை ஒப்பிட்டு, நிர்வாகப் பிரிவு சட்டமன்றக் கிளையின் அதிகாரத்தையும் சுயாட்சியையும் மதித்தது. அமெரிக்க அரசாங்கம் தனது விமானம் தாங்கி கப்பலை தைவானுக்கு அப்பால் உள்ள கடல்களுக்கு அனுப்பியது. விமான ஆதரவையும் தயார் நிலையில் வைத்துள்ளது” என்று ப. சிதம்பரம் சுட்டிக்காட்டினார்.
நம் நாட்டில், ராஜ்யசபா கூட்டத்தொடரில் இருந்தபோது, நிர்வாகப் பிரிவு எதிர்க்கட்சித் தலைவரை அழைத்தது. நாடாளுமன்ற பிரிவின் இரு தலைவர்களில் ஒருவர் கையறு நிலையில் உள்ளதாக கெஞ்சினா. இது ஒரு துக்க நாள் என்று அவர் கூறினார்.
பல எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிரான அமலாக்கத்துறை இயக்குநரக விசாரணைகளில், ப. சிதம்பரம் எந்த ஒரு குறிப்பிட்ட வழக்கு குறித்தும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனால், விசாரணையின் அதிகாரங்களும் சட்டங்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன என்பது பெரிய அளவில் தெளிவாகத் தெரிகிறது என்று வலியுறுத்தினார்.
“அனைத்து நிறுவனங்களும் அடக்கப்பட்டன அல்லது ஏமாற்றப்பட்டுள்ளன அல்லது கைப்பற்றப்பட்டுள்ளன. ஜனநாயகம் மூச்சுத் திணறுகிறது. நம்மிடம் ஜனநாயகக் கவசம் இருக்கலாம். ஆனால், அந்த கவசம் உடைந்துவிட்டது. இது கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும். இதைத்தான் ராகுல் காந்தி தனது பதிலில் (வெள்ளிக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில்) குறிப்பிட்டார்” என்று ப. சிதம்பரம் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.