மதுரை அலங்காநல்லூரில் தேனி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் அறிமுக கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்துக்கு பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி தலைமை தாங்கினார்.
அப்போது பேசிய அவர், “தேனி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இதற்கு தி.மு.க தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, “தேனியில் தங்கத் தமிழ் செல்வன் தோற்றால் மறுநாளே எனது அமைச்சர் பதவியையும், கட்சி பதவியையும் ராஜினாமா செய்வேன்” என்றார்.
மேலும், தி.மு.க-வின் வெற்றிக்கு அனைவரும் உண்மையாக உழைக்க வேண்டும்” என்றார். தேனி தொகுதியில் பா.ஜ.க கூட்டணி சார்பில் டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார்.
இதனால் இந்தத் தொகுதியில் போட்டி அதிகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. நாடு முழுக்க நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
முதல்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“