பணி நிரந்தரம்: 'திருமாவளவன் சொல்லும் கருத்து சரியானது அல்ல' - பெ. சண்முகம் எதிர்ப்பு

தூய்மைப் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கூடாது என திருமாவளவன் பேசிய நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், திருமாவளவனின் கருத்து சரியானது அல்ல என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தூய்மைப் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கூடாது என திருமாவளவன் பேசிய நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், திருமாவளவனின் கருத்து சரியானது அல்ல என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
PS Thiruma

திருமாவளவன், அதியமான் ஆகிய இரு தலைவர்களும் தூய்மைப் பணியாளார்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது என்று கூறிய நிலையில், சி.பி.எம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், திருமாவளவனின் கருத்து சரியானது அல்ல என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரியும், தனியார்மயப்படுத்துதலை எதிர்த்தும் ரிப்பன் மாளிகையின் முன்பு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் போராடி வந்தனர். தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்துக்கு, வி.சி.க, சி.பி.எம், நா.த.க த.வெ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் ஆதரவு தெரிவித்தன. 

Advertisment

இதைத் தொடர்ந்து, அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் தூய்மை பணியாளர்கள் போராட்டக் குழுவுடன் பலகட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தினர். ஆனாலும், சுமூகமான முடிவுகள் எட்டப்படவில்லை. 13-வது நாள் போராட்டத்தின் போது, நீதிமன்ற உத்தரவுப்படி, ஆகஸ்ட் 13-ம் தேதி நள்ளிரவு தூய்மைப் பணியாளார்களை காவல்துறை கைது செய்தது.

தூய்மைப் பணியாளார்களை கைது செய்தபோது, கடுமையாக நடந்துகொண்ட காவல்துறை, தூய்மைப் பணியாளார்களுக்கு அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்களை தாக்குவது போன்ற வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. தூய்மைப் பணியாளார்களின் கைது நடவடிக்கைக்கு, அ.தி.மு.க, பா.ஜ.க போன்ற எதிர்க்கட்சிகள் மட்டுமில்லாமல் தி.மு.க கூட்டணி கட்சிகளான வி.சி.க, சி.பி.எம் கண்டனம் தெரிவித்தன. சி.பி.எம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இந்த சூழலில், தமிழக அரசு, தூய்மை பணியாளர்களின் நலன் பாதுகாக்கப்படும் என 6 சிறப்பு திட்டங்களை அறிவித்தது. ஆனால், தூய்மைப் பணியாளார்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.

Advertisment
Advertisements

இந்நிலையில், வி.சி.க தலைவர் திருமாவளவன், சென்னையில் தன்னுடைய பிறந்தநாள் விழாவில் பேசுகையில், “குப்பை அள்ளுபவர்களை பணி நிரந்தரம் செய்து நீங்கள் குப்பையை மட்டுமே அள்ளுங்கள் என்று சொல்வதில் உடன்பாடு இல்லை. அவர்களின் தரம் உயர வேண்டும். இது தான் மாற்று சிந்தனை. குப்பை அள்ளுபவர்களின் பிள்ளைகள் தான் குப்பை அல்ல வேண்டுமா? இந்த தலைமுறை அந்த தொழிலை செய்தால் அடுத்த தலைமுறை உயர வேண்டும் என்பது தானே சமூகநீதி” என்று பேசினார்.

இதே போல, ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  “தூய்மை தொழிலில் பணி நிரந்தரம் என்ற கோரிக்கை மீண்டும் ஆதிதிராவிடர், அருந்ததியர் சமூகங்களை குலத்தொழிலுக்கே கொண்டு செல்லும். பணிநிரந்தரம் என்பது அடுத்த தலைமுறையில் குப்பை அள்ளுவதற்கான ஒரு சமூகம் இருக்க வேண்டும், என்கிற ஆதிக்க மனநிலையின் வெளிப்பாடாகவே இருக்கிறது.

தூய்மை தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் ஒருபோதும் பணி நிரந்தரம் என்று கோரிக்கையை முன் வைக்க வேண்டாம். தூய்மை தொழிலாளர்களின் வாழ்வு மேம்பட பல்வேறு சிறப்புமிக்க திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது அதை வரவேற்கிறோம். சுயமரியாதையுடன் வாழ்வதற்கு குலத்தொழிலில் இருந்து வெளியேறுவது சரியானதாகும். பணி நிரந்தரம் என்ற கோரிக்கையை புறக்கணிப்போம்” என்று கூறியிருந்தார்.

திருமாவளவன், அதியமான் ஆகிய இரு தலைவர்களும் தூய்மைப் பணியாளார்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது என்று கூறிய நிலையில், சி.பி.எம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், திருமாவளவனின் கருத்து சரியானது அல்ல என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பெ. சண்முகம் கூறியதாவது, “நான் திருமாவளவன் கருத்தை ஏற்கவில்லை. தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கூடாது என திருமாவளவன் சொல்லும் கருத்து சரியானது அல்ல. எனக்கு தெரிந்த ஒரு பெண்ணின் பெற்றோர் இருவரும் தூய்மைப் பணியாளர்கள். நிரந்தர பணியாளர்களாக அவர்கள் இருந்ததால், அதில் கிடைக்கும் வருமானம் மூலம் அப்பெண்ணை நன்றாக படிக்க வைத்தனர்.

இதனால் அப்பெண் இன்று முனைவர் பட்டம் பெற்று கல்லூரி பேராசிரியராக இருக்கிறார். ஒருவேளை அவர்களுக்கு நிரந்தரப் பணி இல்லையென்றால், பெற்றோர்களுக்குப் பின் அந்தப் பெண்ணும் தூய்மைப் பணிக்கே வந்திருப்பார்.

பணி நிரந்தரம் செய்யப்பாட்டால் அதில் கிடைக்கும் ஊழியம், சலுகைகளால் அடுத்த தலைமுறை முன்னேற்றம் அடையும். நாம் ஒன்றும், பரம்பரையாக ஒரு குடும்பத்துக்கு தூய்மைப் பணியாளர் பணியை வழங்க வேண்டும், இதே வேலையை பரம்பரையாக அவர்களுக்கு நிரந்தரம் செய்யவேண்டும் எனக் கேட்கவில்லை. இப்போது பணியில் உள்ளவர்களை நிரந்தரம் செய்யவே கேட்கிறோம்.

தூய்மைப் பணியாளார்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டாம் என்றால் ஒப்பந்தப் பணியாளராக மட்டும் செயல்படலாமா?” என்று பெ. சண்முகம் கேள்வி எழுப்பினார்.

Thirumavalavan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: