Advertisment

பாலமேடு ஜல்லிக்கட்டில் சாதிய பாகுபாடு: அமைச்சர் மீது மாடுபிடி வீரர் குற்றச்சாட்டு; பா.இரஞ்சித் அமைப்பு கண்டனம்

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சாதிய பாகுபாடு பார்க்கப்பட்டுள்ளதாக இயக்குநர் ப. இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் குற்றம்சாட்டியுள்ளது.

author-image
WebDesk
New Update
Pa Ranjith Minister Moorthy

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளைத் தழுவும் வீரர்கள் மத்தியிலும், மாடுகளை அவிழ்த்துவிடுவதிலும் சாதிய பாகுபாடு நிலவியது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சாதிய பாகுபாடு பார்க்கப்பட்டுள்ளதாக இயக்குநர் ப. இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், அமைச்சர் மூர்த்தி தனது சமூக மக்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும், டோக்கன் வழங்கப்பட்ட போதும் மாடுபிடி வீரர் தமிழரசன் களத்தில் அனுமதிக்கப்படாதது ஏன் என்றும் கேள்வி நீலம் பண்பாட்டு மையம் கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisment

மதுரையில் உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளைத் தழுவும் வீரர்கள் மத்தியிலும், மாடுகளை அவிழ்த்துவிடுவதிலும் சாதிய பாகுபாடு நிலவியது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

பாலமேடு ஜல்லிக்கட்டுப் போடியில் பங்கேற்பதற்கு மாடுபிடி வீரர் தமிழரசன் இளைஞருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாடுபிடி வீரர் தமிழரசன் ஊடகங்களிடம் கூறுகையில், “கடந்த 2 ஆண்டுகளாக சிறந்த மாடுபிடி வீரராக இருந்தவன். முதல்நாள் இரவு 2 மணியளவில் தான் எனக்கு டோக்கன் கொடுக்கப்பட்டது. ஒரு சிலருக்கு விரைவாக டோக்கன் வழங்கப்பட்டது. எங்களுக்கு டோக்கன் அளிக்கவே தாமதமாகியது. ஜல்லிக்கட்டில் மீண்டும் சாதி பார்க்க தொடங்கிவிட்டார்கள். இதனை கேட்க சென்ற என்னை அடித்து தாக்கினர். காலை 5 மணி முதலே வரிசையில் அமர்ந்துவிட்டோம். கருப்பாயூரணி கார்த்தி போன்றவர்கள் நேரடியாக எந்த வரிசையிலும் நிற்காமல் டோக்கன் வாங்கி சென்றுள்ளார். காளையால் காயமடைந்து ஊருக்கு சென்றிருந்தால்கூட பெருமையாக இருந்திருக்கும். என்னை அனுமதிக்காமல் வெளியே அனுப்பிவிட்டார்கள்” என்று வருத்தத்துடன் கூறினார். 

மேலும், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில், அமைச்சர் மூர்த்தி தனது சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

Advertisment
Advertisement

இந்நிலையில் இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சாதிய பாகுபாடு நடந்ள்ளது என்றும் அமைச்சர் மூர்த்தி மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

இதுகுறித்து நீலம் பண்பாட்டு மையம் எக்ஸ் பக்கத்தில், மதுரை ஜல்லிக்கட்டில் சாதி பாகுபாடு என்று தலைப்பிட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலம் பண்பாட்டு மையத்தின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “இருமுறை முதல் பரிசு வென்ற வீரர் தமிழரசன் என்று அனைவரும் அறிந்தும் திட்டமிட்டு டோக்கன் அளிக்காமல் நேரத்தை வீணடித்துள்ள நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம். 

அமைச்சர் மூர்த்தி தனது சாதி சேர்ந்த வீரருக்கு மட்டும் ஆதரவாக இருப்பதும், போராடி டோக்கன் வாங்கியும் தன்னை ஜல்லிக்கட்டில் அனுமதிக்கவில்லை, களமிறங்க முயற்சித்தும் காவல்துறை ஒருபக்கம் தாக்கினார்கள். இதற்கு முழு காரண‌ம் சாதிதான் என்று குற்றம்சாட்டியுள்ளார். 

தமிழரசன் கண்ணீர் பேட்டி சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளன, வீரர் தமிழரசன் புறக்கணிக்கத்திருப்பது ஏன் ?” என்று கேள்வி மதுரை மாவட்ட ஆட்சியரை டேக் செய்து நீலம் பண்பாட்டு மையம் கேள்வி எழுப்பியுள்ளது. 

கடந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வென்ற அபிசித்தரும் அமைச்சர் மூர்த்தி மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jallikattu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment