புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறக்க குடியரசுத் தலைவரை அழைக்காதது நவீன தீண்டாமை என்று இயக்குநர் பா.ரஞ்சித் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதைப்பற்றி மேலும் கூறியதாவது, "புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறக்க குடியரசுத் தலைவரை அழைக்காதது நவீன தீண்டாமை; சாதி பாகுபாடுகளை தீர்ப்பதற்கு பதிலாக, சாதியின் பெயரால் நிகழ்த்தப்படும் தீய வழக்கம் தொடர்கிறது.
பழங்குடி சமூகத்தை சேர்ந்த நாட்டின் முதல் குடிமகளை அழைக்காதது கண்டனத்திற்குரியது.
அரசியல் சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் விரோதமாக பாஜக செயல்பட்டு வருகிறது", என்று இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil