புதுக்கோட்டை, வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்களை கண்டறியாமல் பாதிக்கப்பட்ட மக்களை குற்றத்தை ஒப்புக்கொள்ள காவல்துறையினர் கட்டாயப்படுத்துவதாக இயக்குநர் ரஞ்சித் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டை, முத்துகாடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் கிராமத்தில் உள்ள பகுதிதான் வேங்கைவயல். அப்பகுதியில் பட்டியலின சமூகத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டியில் சில வாரங்களுக்கு முன்னால் மலம் கலக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்களுக்கு உடல் உபாதகள் ஏற்பட்டது.
இந்நிலையில் இதுபோன்ற சாதியக் கொடுமை புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி குற்றம் சாட்டியது. மேலும் புதுக்கோட்டை ஆட்சியாளர் சம்பவ இடத்திற்கு சென்று பட்டியலின மக்களை கோவிலுக்குள் செல்லுமாறு கூறினார். மேலும் இரட்டை குவளை முறை பின்பற்றியவர்களை கைது செய்தார்.
சம்பவம் நடந்து பல நாட்க்ள் ஆகியும் மலம் கலந்தவர்களை காவல்துறையினர் கைது செய்யவில்லை என்று எவிடன்ஸ் கதிர் மற்றும் அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டினர். மேலும் முதல்வர் இது குறித்து ஒரு அறிக்கைகூட வெளியிடவில்லை என்றும் விமர்சிக்கப்பட்டது . இந்நிலையில் சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக பேசினார்.
இநிந்லையில் இந்த சம்பவம் தொடர்பாக இயக்குநர் ரஞ்சித் ட்வீட் செய்துள்ளார். “தொடரும் சமூக அநீதி. புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முயற்ச்சிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு விசாரணை என்ற பெயரில் மிரட்டி வரும் தமிழக காவல் துறைக்கு கடூம் கண்டனங்கள்” என்று பதிவு செய்துள்ளார்.
மேலும் அவர் “வன்கொடுமைகள் எதிர்க்கொண்ட மக்களை சந்திக்க துணிவில்லாத ஆதி திராவிட நலத்துறை அமைச்சருக்கும், பட்டியலின மக்களுக்காக எந்த நடவடிக்கைகளிலும் செயல்படாத கழகங்களின் தனத்தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் வன்மையான கண்டனங்கள்” என்று பதிவு செய்துள்ளார்.