விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி. சாலையில் நடைபெற்ற த.வெ.க மாநாட்டில் பேசிய விஜய், “எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் மக்கள் அளிக்க உள்ள த.வெ.க-வுக்கு செலுத்த உள்ள வாக்குகள் ஒவ்வொன்றும் அணுகுண்டாக மாறும். திராவிட மாடல் ஆட்சி என சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள். என்ன தான் எங்களுக்கு நீங்கள் வர்ணம் பூச முயன்றாலும், மோடி மஸ்தான் வித்தை காட்டினாலும் எங்களிடம் அது எடுபடாது. பிளவுவாத அரசியல் நமது சித்தாந்த எதிரி. பெரியார், அண்ணா பெயரை சொல்லி கொள்ளையடிக்கும் ஒரு குடும்பம் நமது அரசியல் எதிரி. அவர்கள் செய்வது பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா?” என்று விஜய் தி.மு.க-வை நேரடியாகவே தாக்கிப் எழுப்பினார்.
மேலும், “திராவிடமும் தமிழ்த் தெசியமும் நம்முடைய இரு கண்கள்” என்று த.வெ.க தலைவர் விஜய் பேசினார்.
2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நமக்கு 100 வெற்றி நம்பிக்கை இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றாலும், நம்மை நம்பி வருபவர்களை அரவணவைப்போம் என்று த.வெ.க தலைவர் விஜய் பேசினார்.
“நம்மை நம்பி, நம் செயல்பாட்டை நம்பி நம்மளோடு சிலர் வரலாம் இல்லையா, அதற்கான அரசியல் சூழல் உருவாகலாம் இல்லையா, அப்படி வருபவர்களையும் நாம் அன்போடு அரவணைக்க வேண்டும் இல்லையா, நமக்கு எப்போதுமே நம்மை நம்பி வருபவர்களை அரவணைத்து தானே பழக்கம். அதனால், நம்மை நம்பி, நம்மோடு இணைந்து களம் காண வருபவர்களுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும்” என்று த.வெ.க தலைவர் விஜய், கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று பேசினார்.
மேலும், “பாகுபாடு இல்லாத சமத்துவ சமுதாயத்தை உண்டாக்க, உங்களுக்காக நான் வருகிறேன்” என்று கூறிய விஜய் பேசினார்.
முன்னதாக, த.வெ.க மாநாட்டில், “சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை பேணிக்காக்கும் பொறுப்புள்ள தனி மனிதனாக செயல்படுவேன்;
*மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப்பாதையில் பயணித்து என்றும் மக்கள் நல சேவகராக கடமையாற்றுவேன் என உறுதியளிக்கிறேன்.” என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்நிலையில், த.வெ.க மாநாட்டில் விஜய்யின் அரசியல் கன்னிப் பேச்சுக்கு இயக்குநர் பா. ரஞ்சித் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் “ என்கிற புவியியல் அமைப்பின் அடிப்படையான தத்துவத்தை தாங்கி தன் முதல் அரசியல் மேடை பேச்சை முடித்திருக்கும் #தமிழகவெற்றிக்கழகம் தலைவர் திரு. விஜய் 💥💥💥@actorvijay na அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! “ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு “…
— pa.ranjith (@beemji) October 27, 2024
இயக்குநர் பா. ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, “‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற புவியியல் அமைப்பின் அடிப்படையான தத்துவத்தை தாங்கி தன் முதல் அரசியல் மேடை பேச்சை முடித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்-க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். ‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ மற்றும் சாதி மத வர்க பிரிவினை வாதத்திற்கும் ஊழலுக்கும் எதிராக செயல்படப்போவதாக அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.