New Update
00:00
/ 00:00
திருச்சிராப்பள்ளி துறையூர் வட்டம் பச்சைமலை அருகில் உள்ள நெசக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் நேற்றிரவு (21.06.2024) இரவு பச்சை மலைப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு இருந்த 250 லிட்டர் கள்ளச்சாராயத்தை கீழே ஊற்றி அழித்தனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களை அழைத்து கள்ளச்சாரயத்தின் தீமைகளை எடுத்து கூறியதை தொடர்ந்து அக்கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் மாவட்ட ஆட்சியர் முன்பாக மது போதைக்கு எதிராக இனி ஒருபோதும் எங்கள் கிராமத்தில் கள்ளச்சாராய உற்பத்தி நடக்காது அதனை அனுமதிக்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் ஏராளமான காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக மூன்று கிலோமீட்டர் தூரம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், எஸ் பி வருண்குமார் இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்று சாராய ஊறலை அழித்தனர். மேலும் அப்பகுதி மக்கள் சாராய ஊறலை சுக துக்க நிகழ்வுகளுக்கு யாரும் போட அனுமதிக்க மாட்டோம் விடவும் மாட்டோம் என்று உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர், எஸ் பி முன் எடுத்துக்கொண்டனர்.
பின்பு பேசிய மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்; மாவட்ட எஸ்பியின் கண்காணிப்பு குழுவினர் நடத்திய அதிரடி சோதனையில் பச்சை மலை ஓடை அருகே சாராய ஊறல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு நாங்களே களத்திற்கு சென்று அதனை முற்றிலும் அழித்துள்ளோம். பச்சை மலையில் சுக, துக்க நிகழ்வுகளுக்கு இது போன்ற செயலில் சிலர் ஈடுபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இனி திருச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் ஊறல் இல்லாத நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.