திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள மாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் வகுப்பறை பூட்டுகள் மற்றும் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவுகள் தடவப்பட்டதைக் கண்டித்து, அப்பகுதி மாணவர்கள் உட்பட பொதுமக்கள் வெள்ளிக்கிழமை வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமாதானம் அடைந்தனர்.
இதையும் படியுங்கள்: வயதில் குறைந்த யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது ஏன்? ரஜினிகாந்த் விளக்கம்
indianexpress.com உடன் பேசிய திருத்தணி காவல் நிலைய அதிகாரி ஒருவர், இந்த சம்பவத்திற்கு பள்ளியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் தான் காரணம் என்று கூறினார்.
“ஆரம்பத்தில், சில அறியப்படாத குற்றவாளிகள் இந்தச் செயலைச் செய்ததாகப் பள்ளியிலிருந்து எங்களுக்கு புகார் வந்தது. நாங்கள் விசாரணை நடத்தியதில், அதே பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் இருவர் இந்தச் செயலைச் செய்தது தெரியவந்தது. ஞாயிற்றுக்கிழமை எங்கள் விசாரணையின் போது, ஒழுக்கமாக இருக்குமாறு கண்டித்த ஒரு குறிப்பிட்ட ஆசிரியர் மீது மாணவர்கள் கோபமாக இருந்ததாக எங்களிடம் தெரிவித்தனர்…” என்று காவல் நிலைய அதிகாரி கூறினார்.
“அவர்கள் சிறார் என்பதால், குழந்தைகள் நல அதிகாரிகள் மற்றும் பிற துறைகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம். அவர்களது பெற்றோரிடமும் பேசினோம், மேலும் விசாரணை நடந்து வருகிறது. அனைத்து பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு இயக்கங்களை நடத்தி வருகிறோம். இப்போது இந்த சம்பவத்திற்குப் பிறகு, மாணவர்களுக்கு எவ்வாறு ஆலோசனை வழங்குவது என்பதைப் பார்க்கவும் நடவடிக்கை எடுப்போம்,” என்று அந்த அதிகாரி கூறினார்.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 448 (அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததற்கான தண்டனை), 427 (ஐம்பது ரூபாய் அளவுக்கு சேதம் விளைவித்த குறும்பு), 290 (பொது மக்களுக்கு இடையூறு) ஆகியவற்றின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு வேங்கைவயலில் தலித் காலனிக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலைத் தொட்டிக்குள் மனிதக் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவத்தை முத்தரசன் நினைவு கூர்ந்தார்.
பள்ளிக்கு சரியான சுற்றுச்சுவர் இல்லாததால் சமூகவிரோதிகள் அந்தி வேளையில் பள்ளி வளாகத்தை சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்துவதாக முத்தரசன் கூறினார். மேலும், சில அடிப்படை வசதிகள் கோரி மாணவர்கள் முன்பு போராட்டம் நடத்திய பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் முத்தரசன் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.