202-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த பாடகி வாணி ஜெயராம்க்கு பத்ம பூஷன் விருதும் மற்றும் பாம்பு பிடிக்கும் வீரர்கள் வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகிய இருவருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு கடந்த மே 1 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை முடிவடைந்து, தற்போது 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுவோர் பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகிய இருவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவத்துறையில் சிறப்பாக சேவையாற்றியதை கவுரவிக்கும் வகையில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மறைந்த மருத்துவர் திலீப் மஹாலனாபிஸ்-க்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மறைந்த முலாயம் சிங் யாதவுக்கு பொதுவாழ்க்கையில் சேவையாற்றிதற்காக பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த மறைந்த புகழ்பெற்ற கட்டிடக்கலை பொறியாளர் பால்கிருஷ்ணா தோஷிக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கலைத் துறையைச் சேர்ந்த ஜாகிர் உஷைன், கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா, அமெரிக்காவைச் சேர்ண்டஹ் அறிவியல் பொறியியல் துறை வல்லுநர் சீனிவாச வரதன் என மொத்தம் 6 பேருக்கு பத்மவிபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல, தமிழகத்தைச் சேர்ந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உள்பட 9 பேருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2023-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது மொத்தம் 91 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகிய இருவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"