Advertisment

கருணாநிதி மீது அளவற்ற பாசம்... பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி யார்?

பத்மஸ்ரீ விருது பெற்ற இயற்கை விவசாயி பாப்பம்மாள் பாட்டி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

author-image
WebDesk
New Update
Padma Shri awardee and organic farmer dies at 108 who is pappammal Tamil News

பாப்பம்மாள் பாட்டி கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தி.மு.க-வின் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பெரியார் விருது அறிவிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேவனாபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதி மருதாச்சலம் - வேலம்மாள். இந்த தம்பதி தங்களது திருமணத்துக்குப் பின் தேக்கம்பட்டி என்கிற கிராமத்திற்கு குடிபெயர்ந்தனர். இவர்களது மகள் பாப்பம்மாள் (எ) ரங்கம்மாள்(109). 

Advertisment

பாப்பம்மாள் கணவர் ரங்கப்பன். தாய், தந்தையர் 1916 ஆம் ஆண்டில் இறந்த பின்னர் கணவருடன் இணைந்து தங்களுக்கு சொந்தமான 10 ஏக்கர் விவசாய நிலத்தில் இயற்கையான முறையில் விவசாயம் செய்து வந்தார் பாப்பம்மாள். அவர் 1959 ஆம் ஆண்டு தேக்கம்பட்டி  ஊராட்சியின் வார்டு உறுப்பினராகவும்,1964 ஆம் ஆண்டு காரமடை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராகவும், மாதர் சங்கத்தலைவியாகவும் இருந்துள்ளார்.

மேலும், கடந்த 45 ஆண்டுகளாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விவசாயிகள் கலந்துரையாடல் குழுவில் (Farmers Discussion Group) இணைந்து செயல்பட்டு வருகிறார். இடையில் கணவர் 20 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார் என்ற சோகம் இருந்தாலும் தனது முயற்சியினை கைவிடாமல் 90 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கையான முறையில் விவசாய செய்து வந்தார் பாப்பம்மாள். 

பாப்பம்மாள் பாட்டியின் இந்தச் சேவையை பாராட்டி மத்திய அரசு இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு " பத்மஸ்ரீ " விருதினை அப்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கைகளால் வழங்கி கவுரவித்தது. இவர் தனது சிறு வயது முதலே தி.மு.க மீதும், தி.மு.க தலைவர் கருணாநிதி மீதும் கொண்ட அளவற்ற பாசம், பற்று காரணமாக தி.மு.க-வில் தனது இறுதி மூச்சு உள்ளவரை கட்சியின் மூத்த நிர்வாகியாகவே இருந்து வந்தார். தி.மு.க சார்பில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களிலும் பாப்பம்மாள் பாட்டி கலந்து கொண்டார். 

இந்நிலையில், பாப்பம்மாள் பாட்டி கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தி.மு.க-வின் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பெரியார் விருது அறிவிக்கப்பட்டது. அதேபோல் கடந்த செப்.17 ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலில் நடந்த தி.மு.க முப்பெரும் விழாவில் பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டிக்கு பெரியார் விருதினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார். உடல் நலக்குறைவால் வீட்டில் இருந்த பாப்பம்மாள் பாட்டி சார்பாக அவரது மகள் பெரியார் விருதை பெற்றுக்கொண்டார். 

இந்த நிலையில் தான், பத்மஸ்ரீ விருது பெற்ற இயற்கை விவசாயி பாப்பம்மாள் பாட்டி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளர். பாப்பம்மாள் பாட்டியின் மறைவை அறிந்த பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment