/indian-express-tamil/media/media_files/2025/04/29/U99UduCKEqPtmGgq1x8d.jpg)
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு நடிகர் அஜித்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமார் பத்மபூஷன் விருது பெற்ற நிலையில் தற்போது பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு "மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். இனி இதுபோல் நடக்கக் கூடாது. எல்லையில் உள்ள நம் ராணுவ வீரர்களால், நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம். தாக்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் அனைத்து மதங்களையும், சாதிகளையும் மதிக்க வேண்டும். நமக்குள் எந்த மோதலும் இருக்க கூடாது வேற்றுமைகளை ஒதுக்கிவிட்டு, அமைதியாக வாழ அனைவரும் பிரார்த்திப்போம் என நடிகர் அஜித் குமார் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.