பாலக்காடு, மயிலாடுதுறை ரயில் சேவைகளில் மாற்றம்: திருச்சி கோட்டம் அறிவிப்பு!

கரூரில் நடைபெற்று வரும் பொறியியல் பணிகள் மற்றும் மணப்பாறை - கொளத்தூர் இடையேயான பணிகள் காரணமாக, பாலக்காடு, மயிலாடுதுறை உள்ளிட்ட முக்கிய ரயில் சேவைகளில் பகுதி ரத்து மற்றும் வழித்தட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கரூரில் நடைபெற்று வரும் பொறியியல் பணிகள் மற்றும் மணப்பாறை - கொளத்தூர் இடையேயான பணிகள் காரணமாக, பாலக்காடு, மயிலாடுதுறை உள்ளிட்ட முக்கிய ரயில் சேவைகளில் பகுதி ரத்து மற்றும் வழித்தட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Train service

பொறியியல் பணிகள் காரணமாக பாலக்காடு, மயிலாடுதுறை ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது, 

Advertisment

கரூரில் பொறியியல் பணிகள் காரணமாக பாலக்காடு - திருச்சி விரைவு ரயிலானது (16844) வரும் 20 ஆம் தேதி திருச்சி - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, பாலக்காடு - கரூா் வரை மட்டுமே இயக்கப்படும்.

மயிலாடுதுறை - சேலம் மெமு ரயிலானது (16811) வரும் 20 ஆம் தேதி சேலம் - வைரராக்கியம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, மயிலாடுதுறை - வைரராக்கியம் இடையே மட்டும் இயக்கப்படும். மறுமாா்க்கமாக சேலம் - மயிலாடுதுறை மெமு (16812) ரயில் சேலம் - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, மயிலாடுதுறை - கரூா் வரை மட்டுமே இயக்கப்படும்.

வழித்தட மாற்றம்: பொறியியல் பணிகள் காரணமாக மணப்பாறை - கொளத்தூா் இடையேயான செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) வரும் 20, 21, 23, 24, 25 ஆகிய தேதிகளில் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

Advertisment
Advertisements

மறுமாா்க்கமாக, மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயிலானது (16847) வரும் 22, 25 ஆம் தேதிகளில் மணப்பாறை, வையம்பட்டி, வடமதுரை, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி ரயில் நிலையங்களைத் தவிா்த்து, திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகா் வழியாக இயக்கப்படும்.

கன்னியாகுமரி - சாா்லப்பள்ளி சிறப்பு ரயிலானது (07229) வரும் 20 ஆம் தேதி மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு ரயிலானது (12666) வரும் 21 ஆம் தேதி மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

மதா வைஷ்ணவ தேவி காட்ரா - திருநெல்வேலி விரைவு ரயிலானது (16788) வரும் 19 ஆம் தேதி திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகா் வழியாக இயக்கப்படும். மேற்கண்டவாறு திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

க.சண்முகவடிவேல்

Trichy Train

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: