மதுரை, பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நேற்று சிறப்பாக நடைபெற்றது. நாற்றுக்கணக்கான மாடுகள் கலந்துக் கொண்ட இந்த போட்டியில் மாடு முட்டியதில் 92 பேர் காயமடைந்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் 15, 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திட்டமிட்டது போலவே நேற்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது
பாலமேடு ஜல்லிக்கட்டு
புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக 800 காளைகளும் மற்றும் 700-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். மதுரையைச் சுற்றியுள்ள திருச்சி, சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாடுபிடி வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். காலை முதலே பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி கோலகலமாக நடந்து வருகிறது.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளையை அடக்கும் வீரர்களுக்கும், யார் பிடியிலும் சிக்காமல் தப்பித்து ஓடும் மாடுகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது. ஆம்னி கார், பைக், தங்கம் மற்றும் வெள்ளிக் காசுகள், போன்ற பரிசுகளை மாடுபிடி வீரர்கள் வென்றனர்.
இந்நிலையில், காளைகள் முட்டியதில், 92 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதில் 13 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.