/tamil-ie/media/media_files/uploads/2020/11/Tamil-News-Today-Live-1.jpg)
பழனி துப்பாக்கி சூடு
பழனியில் நடந்த துப்பாக்கி சூட்டில், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே அக்கரைப்பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 60), விவசாயி. அங்குள்ள அப்பர் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (80), தியேட்டர் அதிபர். இவர்கள் இருவருக்கும், பழனி பீடர் ரோட்டில் உள்ள ஒரு நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்துள்ளது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.
காற்றின் மொழி கண்மணி: சீரியலில் ஹோம்லி, நிஜத்தில் படு மார்டன்!
அந்த நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்கான முயற்சியில் இளங்கோவன் ஈடுபட்டார். இதற்காக நேற்று காலை 10.15 மணி அளவில் நிலத்தை சுத்தப்படுத்தும் பணியில் இளங்கோவனின் உறவினர்களான பழனிசாமி (72), சுப்பிரமணி (57) உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தனர்.
இதுபற்றி அறிந்த நடராஜன் அங்கு சென்று தகராறு செய்தார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுப்பிரமணியனையும், பழனிசாமியையும் அடுத்தடுத்து சுட்டார். துப்பாக்கி சூட்டில் பழனிசாமிக்கு வலதுபுற தொடையிலும், சுப்பிரமணிக்கு வயிற்று பகுதியிலும் குண்டு பாய்ந்தது. படுகாயம் அடைந்த 2 பேரும் சாலையில் மயங்கி விழுந்தனர். இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த ஒருவர், கற்களை எடுத்து நடராஜன் மீது எறிந்தார். அவரையும், நடராஜன் சுட முயன்றார்.
தடையற்ற தமிழ்ச் சக்கரம் க்ரியா ராமகிருஷ்ணன் மறைவு… எழுத்தாளர்கள் கண்ணீர் அஞ்சலி!
இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு பழனிசாமி தொடையில் பாய்ந்த துப்பாக்கி குண்டை டாக்டர்கள் அகற்றினர். சுப்பிரமணி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உயிருக்கு போராடிய நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி உயிரிழந்தார்.
இதையடுத்து நடந்த சம்பவத்தை கூறி, பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார் நடராஜன். துப்பாக்கியையும் ஒப்படைத்தார். பின்னர் நடராஜனை போலீசார் கைது செய்தனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us