பழனி பஞ்சாமிர்த நிறுவனங்களில் ஐடி ரெய்டு, 56.60 கிலோ தங்கம் பறிமுதல் – பக்தர்கள் அதிர்ச்சி!

கணக்கில் வராத 2.2 கோடி ரூபாயும், 56.60 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

palani panjamirtham companies IT raid 56.60 k gold seized - பழனியில் பிரபல பஞ்சாமிர்த நிறுவனங்களில் இருந்து 56.60 கிலோ தங்கம் பறிமுதல்!
palani panjamirtham companies IT raid 56.60 k gold seized – பழனியில் பிரபல பஞ்சாமிர்த நிறுவனங்களில் இருந்து 56.60 கிலோ தங்கம் பறிமுதல்!

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையடிவாரத்தில் இருக்கும் பிரபல கந்தவிலாஸ் மற்றும் சித்தநாதன் பஞ்சாமிர்த கடைகளில் கடந்த 29 ஆம் தேதி முதல் வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இரண்டு கடைகளிலும் தலா 50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில், கணக்கில் வராத 2.2 கோடி ரூபாயும், 56.60 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கணக்கில் காட்டப்படாத 93.56 கோடி ரூபாய் வருவாய் ஏய்ப்பு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நிறுவன கடைகளில் மட்டுமின்றி உரிமையாளர்களின் குடோன், வீடு, தாங்கும் விடுதி, தோட்டத்து வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க – பழனி பஞ்சாமிர்தத்துக்கு கிடைத்த புவிசார் குறியீடு! பழனிக்கே கிடைத்த பஞ்சாமிர்தம்

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Palani panjamirtham companies it raid 56 60 k gold seized

Next Story
சென்னையில் தெலங்கானா மாணவர்கள் – மாநகர பேருந்து ஓட்டுநர்கள் இடையே கடும் மோதல்clash between telangana students and chennai city bus drivers, conductors - சென்னையில் தெலங்கானா மாணவர்கள் - மாநகர பேருந்து ஓட்டுநர்கள் இடையே கடும் மோதல்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com