Advertisment

இனி இவர்கள் பழனி கோவிலுக்குள் நுழைய அனுமதியில்லை : நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து மத கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் பழனி கோயில் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கி உள்ளது.

author-image
WebDesk
New Update
சாஅ
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து மத கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் பழனி கோயில் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கி உள்ளது.

Advertisment

பழனியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவில்  இந்து அறநிலையத்துறை ஆலய நுழைவு விதி 1947ம் ஆண்டின் படி இயற்றப்பட்ட சட்டத்தில் இந்து இல்லாத எந்த ஒரு சமுகத்தினரும் கோயிலுக்குள் நுழைவதை தடுகின்றது.

இந்நிலையில் இந்து அல்லாதவர்கள் பழனி கோலுக்குள் நுழைய தடை என்ற பாதாகையை மீண்டும் வைக்க வேண்டும்மென்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, இந்து அல்லாதவர்கள் கோவிலின் கொடி மரம் தாண்டி உள்ளே அனுமதிகக் கூடாது என்று உத்தரவிட்டார்.

இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற பதாகையை கோவிலில் பல்வேறு  இடங்களில் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மாற்று மதத்தை சேர்ந்தவரகள்  கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய விரும்பினால் கோயிலில் இதற்காக ஒரு பதிவேடு  வைக்க வேண்டும்  என்றும் இந்த பதிவேட்டில் இந்த சுவாமியின்  மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய விரும்புகிறேன் என உத்திரவாதம் ”உறுதிமொழி” எழுதிக் கொடுத்த பின்பு கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என்று நீதிபதி ஸ்ரீமதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

மேலும் இந்து அறநிலையத்துறை ஆணையர், கோவிலின் ஆகம விதிகளை  முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார்.   

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment