scorecardresearch

பி.டி.ஆர் ஆடியோ பற்றி விசாரிக்க அமித்ஷாவிடம் கூறினோம்: டெல்லியில் இ.பி.எஸ் பேட்டி

பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எந்த பிரச்சனையும் இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இ.பி.எஸ் பேட்டி
இ.பி.எஸ் பேட்டி

பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எந்த பிரச்சனையும் இல்லை  என்று அதிமுக பொதுச் செயலாளர்  பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா மட்டும் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவை சதித்து பேசினார்.

இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இ.பி.எஸ் கூறுகையில் “ சம்பிரதாய அடிப்படையில்,  உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜெ.பி நட்டாவை சந்தித்து பேசினோம்.  முந்தைய நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து அதிமுக – பாஜக கூட்டணி தொடர்கிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அதிமுகவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து விரிவான  விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உள்துறை அமைச்சரிடம் வலியுறுத்தினேன்.

கொடநாடு வழக்கில் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்தது அதிமுக அரசுதான். வழக்கு முடிவுக்கு வந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மேலும் குற்றவாளிகளை திமுக ஜாமினில் எடுத்தனர். மேலும் இந்த வழக்கில் உண்மை வெளிவர வேண்டும் என்றால் சி.பி.ஐ விசாரணை வேண்டும்.

அதிமுகவிற்கு துரோகம் இழைத்தவர்களை தவிர யார் வந்தாலும் கட்சியில் சேர்போம். அதிமுகவின் பினாமியாக ஓ. பன்னிர் செல்வம் செயல்படுகிறார். ” என்று அவர் கூறினார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Palanivel thiaga rajan audio issue complaint to amit shah by eps by

Best of Express