/indian-express-tamil/media/media_files/QWCEk7nTRsnnQ0t01HAw.jpg)
பல்சமய நல்லுறவு இயக்கத்தினர், பூக்கள் வாங்க வரும் மக்களிடையே உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கும் படி துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
Coimbatore | Lok Sabha Election 2024 Pollachi: நாளை ஞாயிற்றுக்கிழமை சித்திரை 1 தமிழ்புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. புத்தாண்டையொட்டி மக்கள் மாலை மற்றும் பூக்கள் வாங்குவது வழக்கம். இதையடுத்து, கோவையில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு சென்று தேவையான பூக்களை மக்கள் வாங்கினர்.
இன்று காலை முதல் மக்களின் கூட்டம் அலைமோதிய நிலையில், அங்கு பொள்ளாச்சி பாராளுமன்ற தி.மு.க வேட்பாளர் ஈஸ்வர சாமியை ஆதரித்து பல்சமய நல்லுறவு இயக்கத் தலைவர் முகமது ரபி மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் பூக்கடைகளில் அமர்ந்து பூக்களை விற்று நூதனமாக வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து பூக்கள் வாங்க வரும் மக்களிடையே உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கும் படி துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us