தண்ணீர் தொட்டிக்கு தோண்டிய குழியில் ரூ.50 கோடி மதிப்பு ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு; பொது மக்கள் தரிசனம்

திருச்சி அருகே ரூ.50 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு; தண்ணீர் தொட்டிக்காக குழி தோண்டியபோது கிடைத்தது; வருவாய்த் துறையினர் கைப்பற்றி தொல்லியல் துறையிடம் ஒப்படைத்தனர்

திருச்சி அருகே ரூ.50 கோடி மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு; தண்ணீர் தொட்டிக்காக குழி தோண்டியபோது கிடைத்தது; வருவாய்த் துறையினர் கைப்பற்றி தொல்லியல் துறையிடம் ஒப்படைத்தனர்

author-image
WebDesk
New Update
Panchaloha statue

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வெங்கங்குடி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் வெளிநாட்டில் கப்பலில் தலைமை பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் தமது வீட்டிற்கு அருகே புதிதாக தண்ணீர் தொட்டி அமைக்க முடிவு செய்து அதற்காக பணியாட்களை வரவழைத்து பணியை தொடங்கியுள்ளார். சுமார் 8 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டிய போது சிலைகள் தென்பட்டது.

Advertisment

அடுத்தடுத்து 3 சிலைகள் தென்பட்டதால் உடனே இதுகுறித்து போலீசாருக்கு சுரேஷ் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து மண்ணச்சல்லூர் போலீசார் மற்றும் வட்டாட்சியர் அங்கு விரைந்தனர். சிலைகளை ஆய்வு செய்தபோது அவைகள் ஐம்பொன்னாலான பெருமாள், ஸ்ரீதேவி, மூதேவி சிலை என்பது தெரிய வந்தது. அதனுடன் மீட்கப்பட்ட பொருட்கள் சாமிக்கு பூஜைகள் செய்ய பயன்படுத்தப்படும் செப்பு பொருட்கள் என்பதும் தெரியவந்தது.

மேலும், சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இந்த 3 ஐம்பொன் சிலைகளின் மதிப்பு சுமார் 50 கோடி இருக்கலாம் என்பது வட்டாட்சியர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தொல்லியல் துறையினரிடம் ஒப்படைப்பதற்காக மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் முன்னிலையில் வருவாய்த்துறையினர் சிலைகளை கைப்பற்றி எடுத்து சென்றனர்.

Advertisment
Advertisements

இதற்கிடையில் பூமிக்கடியில் பழமையான ஐம்பொன் சிலை மீட்கப்பட்டதை அறிந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் என ஏராளமானோர் திரண்டு வந்து சிலையை தரிசனம் செய்தனர்.

க.சண்முகவடிவேல்

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: