நெல்லை மாவட்டம் கீழநத்தத்தில், அரிவாளால் வெட்டப்பட்ட பஞ்சாயத்து உறுப்பினர் உயிரிழந்தார். இந்தநிலையில், அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி கீழநத்தம் பஞ்சாயத்து உறுப்பினர் ராஜாமணியை மர்மநபர்களால் வெட்டப்பட்டார். அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு கூடினார்கள்.
அவர்களிடம் வட்டாட்சியர் பேச்சு வார்த்தை நடத்தினார். எனினும் ராஜாமணி உறவினர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்தக் கொலை முன்விரோதம் காரணமாக நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.
இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் டனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“