தமிழக அரசால் நியமிக்கப்பட்ட குழு முதற்கட்டமாக அரசியலமைப்பின் தந்தை பி.ஆர். அம்பேத்கரின் 4 படைப்புகளை தமிழில் மொழிபெயர்ப்பு மற்றும் விமர்சனங்கள் இடம்பெற்ற பதிப்பாக வெளியிட (publication as a critical edition) முடிவு செய்துள்ளது.
Annihilation of Caste, Riddles in Hinduism, Philosophy of Hinduism and Who Were the Shudras? ஆகிய படைப்புகள் முதற்கட்டமாக மொழி பெயர்ப்பு செய்யப்படுகிறது. இந்த படைப்புகளில் சில படைப்புகள் தமிழ் மொழிபெயர்ப்பு கிடைத்தாலும், விமர்சனப் பதிவுகள் இல்லை. விமர்சனப் பதிப்புகள் இளைஞர்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் வரலாற்றை அறியாதவர்களும் தெரிந்து கொள்ளும் வண்ணம் ஆளுமைகள் கருத்து, வரலாற்று நிகழ்வுகள் ஆகியவைகள் இடம் பெற்றிருக்கும் என்றும் அரசு நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர்களில் ஒருவரான விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் டி. ரவிக்குமார் கூறினார்.
இதில், Annihilation of Caste, Philosophy of Hinduism புத்தகங்களின் தமிழ் மொழிபெயர்ப்பின் முதல் வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இது டிசம்பர் 6-ம் தேதி அம்பேத்கரின் நினைவு நாளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்று ரவிக்குமார் கூறினார்.
தகவல் துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் அண்மையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர்களை இக்குழுவில் சேர்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“