ஜெயலலிதாவின் மறைவுககு பின்னர், அதிமுக கட்சி சசிகலா வசம் சென்றது. சொத்துக்கு குவிப்பு வழக்கில் அவருக்கு தண்டனை கிடைத்த நிலையிவ், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப்பட்டார்.
அப்போது ஓ.பன்னீர் செல்வம் அதிருப்தி தெரிவித்தார். மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் தர்மயுத்தம் நடத்தினார்.
அதன்பின்னர், எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர் செல்வமும் இணைந்து செயல்பட்டனர். ஓ. பன்னீர் செல்வம், துணை முதலமைச்சர் ஆக்கப்பட்டார்.
அதன்பின்னர் இருவரும் பிரிந்தனர். எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தொடர்கிறார். ஓ. பன்னீர் செல்வம் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் அவர் கட்சியின் பெயர், கொடி, லெட்டர்பேடு உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஓ. பன்னீர் செல்வம் இன்று (பிப்.5,2024) செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறுகையில், “நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம்.
2 கோடி தொண்டர்கள் தன் பக்கம் இருப்பதாக ஈபிஎஸ் பொய் சொல்கிறார். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நாங்கள் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“