ராமநாதபுரத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஓ.பன்னீர் செல்வம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அ.தி.மு.க வேட்பாளர் ஜெயபெருமாள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களான, ஓ. பன்னீர் செல்வம், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அ.தி.மு.க வேட்பாளர் ஜெயபெருமாள் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது பொதுமக்களுக்கு இடையூராக இருந்ததாக, காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த திங்கள் கிழமை, ஓ.பி.எஸ், நவாஸ் கனி, ஜெயபெருமாள் ஆகியோர் மனு தாக்கல் செய்தபோது, அதிக தொண்டர்கள் அவர்களுடன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வாகன நெறிசல் அதிகமானதாகவும், மக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாக, தேர்தல் பறக்கும் படை அதிகாரி, காவல்நிலையத்தில் நேற்று இரவு புகார் கொடுத்துள்ளார். இவர்கள் உள்பட கட்சி தொண்டர்கள் 500 பேர் மீதும் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“