அதிமுக கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பி.எஸ்-க்கு இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து, அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.
அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ. பன்னீர் செல்வம் பயன்படுத்த தடைவிதிக்க கோரி எதிர்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டும் அதே பதவியை ஓ.பி.எஸ் பயன்படுத்தி வருகிறார் என இ.பி.எஸ் தரப்பில் வாதிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பி.எஸ்-க்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், அதிமுக பெயர், கட்சியின் கொடி, லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த இடைக்கால தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக நாளை மறுதினம் விசாரணைக்கு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“