தமிழ்நாட்டில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ள நிலையில் அக்கூட்டணியை எதிர்கொள்ளும் வகையில் பாஜக கூட்டணியில் அதிமுக இணைந்தது.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சியை கைப்பற்றிவிட்டார்.
இதையடுத்து டிடிவி தினகரன் உடன் ஓ. பன்னீர் செல்வம் கைகோர்த்தார். இந்த நிலையில், டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் கலந்துகொள்ள ஓ.பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இதை ஓ. பன்னீர் செல்வம் தாமாக வெளிப்படுத்திய நிலையில், அதனால்தான் பாஜக தலைமையிலான என்டிஐ கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்றார்.
இதற்கிடையில் தாங்கள் எந்தக் கூட்டணியிலும் இல்லை என ஓ.பி.எஸ் தரப்பின் மூத்தத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “என்னைப் பொருத்தவரை நாங்கள் என்.டி..ஏ கூட்டணியை ஆதரிக்க போவதில்லை. அதேபோல் ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணியையும் நாங்கள் ஆதரிக்கப் போவதில்லை. நாங்கள் எல்லா தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுவோம்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“