/indian-express-tamil/media/media_files/2025/09/11/paramakudi-immanuel-sekaran-memorial-day-youth-fall-from-car-video-tamil-news-2025-09-11-20-51-54.jpg)
பரமக்குடி தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு வாகனங்களில் விதிகளை மீறிச் சென்ற இளைஞர்களில் ஒருவர் தவறி விழ, பின்னால் வந்த கார் சட்டென நிறுத்தியதால் அவர் உயிர் தப்பினார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 68-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
இன்று காலை 8 மணி அளவில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அவரது மகள் சுந்தரி பிரபாராணி மற்றும் இமானுவேல் சேகரன் குடும்பத்தினர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து அவரது சொந்த கிராமமான செல்லூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக அரசு சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., முருகேசன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், பரமக்குடி தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு வாகனங்களில் விதிகளை மீறிச் சென்ற இளைஞர்களில் ஒருவர் தவறி விழ, பின்னால் வந்த கார் சட்டென நிறுத்தியதால் அவர் உயிர் தப்பினார். இதனால், பார்த்திபனூர் பகுதியில் பரபரப்பு நிலவியது.
இளைஞர்கள் மற்றும் பெண்கள் பலர் பேருந்துகள், கார்களில் ஆபத்தான முறையில் பயணித்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. குறிப்பாக, ஒரு காரின் உள்ளே இருந்த இளைஞர் ஒருவர், காரின் மேற்கூரையை நோக்கி ஏற முயன்றபோது சமநிலையை இழந்து சாலையில் கீழே விழுந்தார்.
Watch | தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு வாகனங்களில் விதிகளை மீறிச் சென்ற இளைஞர்கள்
— Sun News (@sunnewstamil) September 11, 2025
காரில் இருந்து இளைஞர் தவறி விழ, பின்னால் வந்த கார் சட்டென நிறுத்தியதால் அவர் உயிர் தப்பினார்#SunNews | #Paramakudi | #Ramanathapurampic.twitter.com/fLEIb7VY50
இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, பின்னால் வந்த வாகனம் உடனடியாக பிரேக் அடித்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, இளைஞர் நூலிழையில் உயிர் தப்பினார். இதனை கண்டு அப்பகுதி மக்கள் பயத்துடன் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.