ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில் உள்ளூர் போலீஸாருடன் இணைந்து துணை ராணுவப் படையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோக அதிவிரைவுப் படை வீரர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தொகுதி முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.