/tamil-ie/media/media_files/uploads/2022/07/airport-2.jpg)
சென்னையின் 2-வது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 20 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் 5,476 ஏக்கர் பரப்பில் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
சென்னையின் 2-வது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 20 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் 5,476 ஏக்கர் பரப்பில் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.
பரந்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், விளை நிலம், நீர்நிலைகள் பாதிக்கப்படும் எனக் கூறி, பரந்தூரைச் சுற்றியுள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, பரந்தூா் விமான நிலையம் அமைய உள்ள இடங்கள் குறித்து ஆய்வு செய்ய, தமிழக அரசு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையிலான குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டது.
இதையடுத்து, மசேந்திரநாதன் தலைமையிலான குழு பரந்தூரை சுற்றியுள்ள கிராமங்களை ஆய்வு செய்து, அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில், பரந்தூர் விமான நிலையத்துக்கு தேவையான 5,746 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழக தொழில் துறை அனுமதி அளித்து கடந்த ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.
பரந்தூர் விமான நிலையம் திட்டத்துக்காக 5,746 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும், இதற்கு தனியார் பட்டா நிலம் 3,774 ஏக்கர், அரசு நிலம் ஆயிரத்து 972 ஏக்கர் கையகப்படுத்தப்படுவதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பரந்தூர் புதிய விமான நிலையம் அமைக்க நில எடுப்புக்கான முதல் நிலை அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில், பரந்தூர் புதிய விமான நிலையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO) மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பித்திருந்தது.
தொழில் வளர்ச்சிக் கழக விண்ணப்பத்தை மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஜூன் 28-ம் தேதி பரிசீலனை செய்ய உள்ளது. இதனிடையே, பரந்தூர் விமான நிலையத்தை 4 கட்டங்களாக அமைக்க 32,704 கோடி ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. முதல் கட்ட கட்டுமானப் பணிகள் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு 2029-ம் ஆண்டில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.