Advertisment

மத்திய அமைச்சரை சந்தித்த தி.மு.க எம்.பி கிரிராஜன்: பரந்தூர் விமான நிலையப் பணியை வேகப்படுத்த மனு

தி.மு.க எம்.பி கிரிராஜன் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியாவை நேரில் சந்தித்து பரந்தூர் விமான நிலையப் பணியை வேகப்படுத்த மனு அளித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Parandur airport: DMK MP Girirajan Petition  Aviation Minister Jyotiraditya Scindia Tamil News

பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் 370 நாட்களுக்கு மேலாக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் உள்ள சுற்று வட்டார 13 கிராம பகுதிகளை ஒன்றிணைந்து 4 ஆயிரத்து 791 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. மறுபுறம், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதினால் நீர்நிலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் விவசாய நிலங்கள் அழிக்கப்படுவதாக கூறி கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் 370 நாட்களுக்கு மேலாக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கிராம சபை கூட்டங்களில் 6 முறை விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளனர்.

மேலும், தமிழ்நாடு அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வு குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏகனாபுரம் கிராம பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் தடையை மீறி கிராம மக்கள் ஊர்வலமாக சென்ற நிலையில், 300 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மனு

இப்படியொரு நிலையில் தான், தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியாவை நேரில் சந்தித்து பரந்தூர் விமான நிலையப் பணியை வேகப்படுத்த மனு அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய ஒன்றிய அரசின் விமான போக்குவரத்து துறை அமைச்சர் திரு.ஜோதிராதித்திய சிந்தியா அவர்களை அவருடைய அலுவலகத்தில் இன்று (04.08.23) சந்தித்து பரந்தூரில் அமையவுள்ள Greenfield விமான நிலைய பணிகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி மனு அளித்தேன்." என்று பதிவிட்டுள்ளார்.

பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் ஒரு வருடத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், விமான நிலையப் பணியை வேகப்படுத்த தி.மு.க எம்.பி கிரிராஜன் மனு அளித்துள்ளது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Dmk Jyotiradiya Scindia Tamilnadu Airport
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment