சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க ஏகனாபுரத்தில் நிலம் கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், பொதுமக்கள் நள்ளிரவு முதல் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். மேலும் அரசு நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வோம் என்று போராடும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 2வது விமான நிலையத்திற்கு பல்வேறு இடங்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், பரந்தூர் இறுதி செய்யப்பட்டது. இருப்பினும், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை எதிர்த்து கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த விமான நிலையத்திற்கு ஏகனாபுரத்தில் நிலம் கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கிடையே 2வது அறிவிப்பை அரசு நிறைவேற்றினால் பொதுமக்கள் பலரும் தற்கொலை செய்து கொள்வோம் என்று கிராம் மக்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி மக்கள் நள்ளிரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.,
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“