Advertisment

ஏகனாபுரம் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு: தாசில்தாரை தாக்கியதாக 7 பேர் மீது வழக்குப் பதிவு

மக்களவை தேர்தலில் அரசு ஊழியர்களை வாக்களிக்குமாறு அழைக்க சென்ற தாசில்தாரை தாக்கியதாக பரந்தூர் அருகேயுள்ள ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த, 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Parandur airport row 7 from Ekanapuram village booked for assaulting tahsildar on polling day Tamil News

ஏகனாபுரம் கிராம மக்கள் தன்னை தாக்க முயன்றதாக திருப்பெரும்புதூர் தாசில்தார் சுந்தரமூர்த்தி சுங்குவார் சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Parandur Airport: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பரந்தூர், வளத்தூர், நாகப்பட்டு, நெல்வாய், தண்டலம், மேல்பொடவூர், மடப்புரம், ஏகனாபுரம், மேலேறி, அக்கம்மாபுரம், குணகரம்பாக்கம் உள்ளிட்ட 20 கிராமங்களை உள்ளடக்கி 5,746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்புகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டு, பல்வேறு கட்ட பணிகளை மேற்கொண்டு தற்போது நிலம் கையகப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

Advertisment

இதனிடையே, பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏகனாபுரம் கிராம மக்கள் 600 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மத்திய அரசோ, மாநில அரசோ பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதற்கான எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தேர்தல் புறக்கணிப்பு 

இதனையடுத்து, ஏகனாபுரம் கிராம மக்கள் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற மக்களவை தேர்தலை புறக்கணித்தனர். ஏகனாபுரம் கிராமத்தில் 1,375 வாக்காளர்கள் உள்ள நிலையில், 21 அரசு ஊழியர்களின் வாக்குகள் மட்டுமே பதிவாகின. மேலும், வாக்குப்பதிவன்று அரசு ஊழியர்களை வாக்களிக்குமாறு அழைக்க சென்ற திருப்பெரும்புதூர் தாசில்தார் சுந்தரமூர்த்தியுடன் கிராம மக்கள் வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால் தாசில்தார் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

வழக்குப் பதிவு

இந்நிலையில், திருப்பெரும்புதூர் தாசில்தார் சுந்தரமூர்த்தி சுங்குவார் சத்திரம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கதிரேசன், சுப்ரமணி, பலராமன், கவாஸ்கர், சுதாகர், விவேகானந்தன், ஓம்பகவதி உள்ளிட்ட 7 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 147 (கலவரம்), 294பி (ஆபாசமான வார்த்தையைப் பயன்படுத்தல்), 332 (வேண்டுமென்றே புண்படுத்துதல்), 341 (தவறான கட்டுப்பாடு) மற்றும் 353 (அரசு ஊழியர் மீது தாக்குதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

போலீசாரின் எப்.ஐ.ஆர் படி, போராட்டக்காரர்கள் கிராமத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது உறவினர்களை வாக்களிக்க வேண்டாம் என்று எச்சரித்ததாகவும், விசாரணைக்காக கிராம நிர்வாக அலுவலர் எழிலரசன் வீட்டிற்கு சென்ற தாசில்தார் சுந்தரமூர்த்தியை அவர்கள் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.மேலும்,  எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் தாசில்தாரின் டிரைவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

திங்கள்கிழமை அவர்களுக்கு சம்மன்களை வழங்கிய போலீஸார், காலை 10 மணிக்குள் விசாரணைக்காக சுங்குவார் சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். "எங்கள் வாக்குமூலங்களை எழுத்துப்பூர்வமாக அளிக்குமாறு போலீசார் எங்களிடம் கேட்டுக் கொண்டனர், நாங்கள் அவ்வாறு செய்தோம், அதன் பிறகு நாங்கள் விடுவிக்கப்பட்டோம். 

இந்த எப்.ஐ.ஆர் ஆதாரமற்றது. போராட்டக்காரர்களை அச்சுறுத்தவும், அவர்களின் எதிர்ப்பை பலவீனப்படுத்தவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தாசில்தார் மீது தாங்கள் கொடுத்த புகாரின் மீது போலீசார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை." என்றும் குற்றம் சாட்டப்பட்ட சுப்ரமணி என்பவர் தெரிவித்துள்ளார். 

ஆஜர்

இந்நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்ட 7 பேர் உள்பட ஏகனாபுரம் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று திங்கள்கிழமை சுங்குவார் சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். இதனால், அப்பகுதியில்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஒரே நேரத்தில் அனைவரும் வர வேண்டிய அவசியம் இல்லை எனவும், தனித்தனியாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்கலாம் எனவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

parandur airport
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment