முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மனைவியும், உதயநிதி ஸ்டாலினின் தாயாருமான துர்கா ஸ்டாலின் காலில் விழுந்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் எம்.எல்.ஏ பரந்தாமன்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ. பரந்தாமன், துர்கா ஸ்டாலின் காலில் விழந்தார். அப்போது அவரை துர்கா ஸ்டாலின் கண்டுக்கொள்ளக் கூடவில்லை.
இந்த நிலையில் இது தொடர்பான காணொலி சமூக வலைதளத்தில் வைரலானது. எம்.எல்.ஏ. பரந்தாமனின் செயல் பெரியார் காட்டிய சுயமரியாதைக்கு எதிரானது என பெரியாரிஸ்ட்களும் விமர்சனம் செய்தனர்.
மறுபுறம் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் எம்.எல்.ஏ. பரந்தாமன், துர்கா ஸ்டாலின் காலில் விழும் வீடியோவை வைரலாக்கினர்.
இந்த நிலையில் இதற்குப் பதிலளிக்கும் வகையில் ட்விட்டரில், துர்கா ஸ்டாலின் காலில் விழும் காணொலியை பகிர்ந்துள்ள எம்.எல்.ஏ. பரந்தாமன், “எங்கள் திமுக குடும்பத்தில் அன்னையிடம் ஆசிப்பெற்தை பதவிக்காக தவழ்ந்தவர்களுக்கு சுயமறியாதை பற்றி என்ன தெரியும்? ” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், “@arivalayam, @DMKITwing” ஆகியவற்றையும் டேக் செய்துள்ளார். இதற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.
பெரியாரிய ஆதரவாளர் புகழ் என்பவர், “ஏற்பில்லை..இரு கை கூப்பிய வணக்கம் போதுமே” எனத் தெரிவித்துள்ளார்.
டாக்டர் நெல்லை என்ற ட்விட்டர் பயனர், “அதேதான். இப்போ இவர் விழுவதை பார்த்து எல்லாரும் ஆரம்பிப்பார்கள். இருகை கூப்பிய வணக்கம் போதும். காலில் விழுந்ததை விட, அதற்கு கொடுக்குற முட்டு ஆபத்தானது” என எச்சரித்துள்ளார்.
மற்றொருபுரம் அதிமுக ஆதரவாளர் நரேஷ், “அடுத்த அன்னை யாரு கிருத்திகா அக்கா வா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார். இதேபோல் பலரும் தங்களின் கருத்தை பதிவிட்டுள்ளனர்.
திமுக ஆதரவாளர் ஒருவர், “அண்ணா.. இவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/