Advertisment

காய்ச்சலால் உயிரிழந்த மகன் - பெற்றோர் எடுத்த விபரீத முடிவு: வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை

கோவையில், மகனை இழந்த துக்கத்தில் இருந்த பெற்றோர் மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Cbe suicide

கோவை மாவட்டத்தில், மகனை இழந்த சோகத்தில் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சேர்ந்த பழனிசாமி என்பவரும், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச் சேர்ந்த வக்தசலா என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்கள் இருவரும் கோவை மாவட்டம், சரவணம்பட்டி பகுதியில் வசித்து வந்தனர். இத்தம்பதியின் 7 வயது மகனுக்கு கடந்த ஏப்ரல் மாதம் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் இரண்டு நாள்களில் மூளை காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்தான்.

தங்கள் மகன் உயிரிழந்ததில் இருந்தே பழனிசாமி மற்றும் வக்தசலா இருவரும் மன அழுத்தத்தில் இருந்துள்ளனர். இதையடுத்து வேடப்பட்டி பகுதிக்கு இத்தம்பதி குடியேறியுள்ளனர். இந்நிலையில், கடந்த 2-ஆம் தேதி கோவை மாவட்டம், காந்திபுரம் பகுதியில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். 

அதன்பின்னர், அறையை காலி செய்வதற்காக விடுதி ஊழியர்கள் கதவை தட்டிய போது நீண்ட நேரமாக கதவு திறக்கப்படமால் இருந்தது. இதில் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், மாற்று சாவி மூலம் கதவை திறந்து பார்த்துள்ளனர்.

அப்போது விடுதி அறையில் இருவரும் சடலமாக கிடந்தது தெரிய வந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இருவரது சடலத்தையும் மீட்டு உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, இத்தம்பதி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக எழுதிவைத்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், தங்கள் மகன் இல்லாத உலகில் இருக்க முடியவில்லை எனவும், தங்கள் மரணத்திற்கு யாரும் காரணமில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பேரில், கோவை காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மகன் உயிரிழந்த சோகத்தில் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Coimbatore Suicide
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment