போலீஸ் அடிக்க வேண்டாம்.. நாங்களே அடிக்கிறோம்.. ரகளை செய்த மாணவர்களை வெளுத்து வாங்கிய பெற்றோர்கள்!

வறுமை நிலையில் மகனை கல்லூரிக்கு அனுப்பி அவன் நல்ல வேளைக்கு செல்வான்

சென்னையில் மாநகர பேருந்தில் பட்டாக்கத்தியுடன் ரகளை செய்த மாணவர்களை, அவரது பெற்றோர்கள் அடித்து அறிவுரை வழங்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

பட்டாக்கத்திடன் ரகளை:

கடந்த 30 ஆம் தேதி, 54 எஃப் மாநகரப் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள், பேருந்து படியில் நின்றபடி பட்டாக்கத்திகளை கையில் பிடித்துக்கொண்டு சாலையில் உரசியபடியே சென்றனர்.

படிக்கிற வயதில் மாணவர்கள், கையில் பட்டாக்கத்தியுடன் பேருந்தில் ரகளை செய்த சம்பவம் பெரும் பர்பரப்பை ஏற்படுத்தியது. மாணவர்கள் ரகளை செய்த வீடியோவும் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் சென்னை மாநில கல்லூரியை சேர்ந்த சிவா, ஆனந்தராஜ் உள்ளிட்ட 4 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

மாணவர்கள் கைது செய்யப்பட்ட உடன், அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.காவல் நிலையத்திற்கு வந்த பெற்றோர்கள், தங்களின் பிள்ளைகளை சரமாரியாக அடித்து அறிவுரை கூறினார். மேலும் இதுப் போன்ற தவறுகளை செய்ய மாட்டோம் என்று கூறி காவலர்கள் முன்பு மன்னிப்பு கேட்க வைத்தனர்.

இதில் ஒரு மாணவனின் தந்தை, வறுமை நிலையில் மகனை கல்லூரிக்கு அனுப்பி அவன் நல்ல வேளைக்கு செல்வான் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதை அழதப்படியே கூறினார். இந்த காட்சிகள் பார்பவர்களையும் கண்கலங்க வைத்தது.

இந்த வீடியோவும் தற்போது வெளியாகி உள்ளது. கைதான 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறை மற்றும் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.

முன்னதாக இதுப்போன்ற செயலில் ஈடுப்படும் மாணவர்களுக்கு அறிவுரை கூறும் வகையில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மாநில கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,

“ படிக்கும்போதே மாணவர்கள் தங்களை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்பது எனது அனுபவம். இதனை நான் அறிவுரையாக கூறுகிறேன். பிறருக்கு உதவி செய்ய வேண்டும் நல்ல பழக்கத்தை மாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும். கஷ்டப்படுபவர்களுக்கு நீங்களாக சென்று, பிரதிபலன் எதிர்பாராமல் சென்று உதவ வேண்டும்.

பன்முக தன்மைகளை வளர்ந்து கொள்ள வேண்டும் என்றும், ஆர்வத்துடன் படித்தால் நல்ல எதிர்காலம் உள்ளது.போராட்டம், போராட்டம் என சிலர் கிளம்பியுள்ளனர். இதனையே தொழிலாளாக செய்யும் அமைப்புகள் கிளம்பியுள்ளன.

அந்த அமைப்பில் உள்ளவர்களிடம் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அவர்களது குடும்பத்தினர் நன்றாக படிக்கின்றனர். நல்ல வேலையில் உள்ளனர். அவர்களால், நீங்கள் தவறாக வழிநடத்த கூடாது” என்று கூறினார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close