கடலூர் மக்களவை தேர்தல் முடிவுகள் -2024
39 மக்களவை தொகுதிகள் கொண்ட தமிழ்நாட்டில், 26-வது தொகுதி கடலூர். 2024-ம் ஆண்டில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது கடலூர் நாடாளுமன்ற தொகுதி.
திட்டக்குடி, விருதாச்சலம், நெய்வேலி, கடலூர், பண்ரூட்டி, குறிச்சிப்பாடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கும். திராவிட கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் கடலூர் மக்களவை தொகுதியில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பும், திராவிட கட்சிகளுக்கு ஆதரவாகவே இருந்து வருகிறது.
2024 மக்களவை தேர்தலில், இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில், எம்.கே.விஷ்ணுபிரசாத், அதிமுக கூட்டணியில், தேமுதிக சார்பில் சிவக்கொழுந்து, பாமக சார்பில் தங்கர் பச்சான், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மணிவாசகம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். கடந்த ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற்ற மக்களவை தேர்தலில், கடலூர் தொகுதியில், 72.57 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
ஜூன் 4-ந் தேதி நடைபெறும் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை குறித்த அப்டேட்களை தெரிந்துகொள்ள இந்த செய்திக்குறிப்புடன் இணைந்திருங்கள்.
காலை 8.45 மணி நிலவரப்படி கடலூர் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் எம்.கே.விஷ்ணுபிரசாத் முன்னிலை பெற்றுள்ளார்.
காலை 10 மணி நிலவரப்படி கடலூர் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் எம்.கே.விஷ்ணுபிரசாத் முன்னிலை பெற்றுள்ளார்.
இயக்குனர் தங்கர்பச்சான் கடலூரில் பின்னடைந்து வருகிறார்
கடலூர் லோக்சபா தொகுதி வாக்கு எண்ணிக்கை நிலவரம் 13829 வாக்குகள் காங்கிரஸ்வேட்பாளர் விஷ்ணு பிரசாத் தொடர்ந்துமுன்னிலை
கடலூர் பாராளுமன்ற தேர்தல் வாக்கு என்னும் பணி தேவனாம்பட்டினம் தந்தை பெரியார் அரசு மற்றும் கலை கல்லூரியில் நடந்து வருகிறது.
கடலூர் தொகுதியில், போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 46,042 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
கடலூர் லோக்சபா தேர்தல் நிலவரம்
தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து =19658
காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்=25228
பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் =11195
நாம் தமிழர் வேட்பாளர் மணிவாசகம்=3151
காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முதல் சுற்று 5575 வாக்குகள் முன்னிலை
கடலூர் நாடாளுமன்ற தேர்தல் இரண்டாம் சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் முன்னிலை..
காங்கிரஸ் -38820
தேமுதிக -27286
பாமக -14520
நாதக - 5129
11534 வாக்குக்கள் வித்தியாசத்தில் -காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் முன்னிலை
11.30 நிலவரப்படி கடலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 70,127 வாக்குகள் பெற்று முன்னிலை தேமுதிக வேட்பாளர் சிவகொழுந்து 47,603 வாக்குகள் பெற்று 2ம் இடத்திலும், பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் 23,368 வாக்குகள் பெற்று 3ம் இடத்திலும் உள்ளனர்!
கடலூர் தொகுதியில் 3.30 மணி நிலவரப்படி, காங்கிரஸ் கட்சியின் விஷ்ணு பிரசாத் 405422 வாக்குகள், தேமுதிகவின் சிவக்கொழுந்து 243218 வாக்குகள், பாமகவின் தங்கபச்சான் 181112 வாக்குகள், நாம் தமிழர் கட்சியின், மணிவாசனம் 52508 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் விஷ்ணு பிரசாத் 162204 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
19வது சுற்று கடலூர் மாவட்டம்
காங்கிரஸ் விஷ்ணுபிரசாத் 4,44,802
அதிமுக முரசு சின்னம் சிவ கொழுந்து 2,64,309
பாமக தங்கர்பச்சான் 1,99,735
நாம் தமிழர் கட்சி மணிவாசகம் 56,275 வாக்குகள் பெற்று உள்ளனர்
காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் முன்னனியில் பெற்றிருந்த நிலையில், இறுதியில் 1,85,896 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கடலூர் மக்களவை தொகுதியில் கடந்த கால தேர்தல் நிலவரங்கள்
2019 மக்களவை தேர்தல் முடிவுகள்
திமுக சார்பில் டி.ஆர்.வி.எஸ், ரமேஷ், 522,160 வாக்குகள், பாமக சார்பில் கோவிந்தசாமி 378,177 வாக்குகள், நாம் தமிழர் கட்சியின் சித்ரா 34,692, மக்கள் நீதி மய்யம் கட்சியின் அண்ணாமலை 23,713 வாக்குகள் பெற்றிருந்தனர். இதில் திமுக சார்பில் போட்டியிட்ட டி.ஆர்.வி.எஸ், ரமேஷ் வெற்றி பெற்றிருந்தார்.
2014 மக்களவை தேர்தல் முடிவுகள்
அதிமுக சார்பில் அருண்மொழி தேவன், 481,429 வாக்குகள், திமுக சார்பில், நந்தகோபாலகிருஷ்ணன், 2,78,304 வாக்குகள், தேமுதிக சார்பில் ஜெயசங்கர், 1,47,606, வாக்குகள், காங்கிரஸ் சார்பில் கே.எஸ்.அழகிரி, 26,650 வாக்குகள், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாலசுப்பிரமணியன், 11,122 வாக்குகள் பெற்றிருந்தனர். இதில் அதிமுகவின் அருண்மொழி தேவன் வெற்றி பெற்றிருந்தார்.
2009 மக்களவை தேர்தல் முடிவுகள்
காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.அழகிரி, 320,473 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். அதிமுக சார்பில் சம்பத், 2,96,941 வாக்குகள், தேமுதிக சார்பில் தாமோதரன், 93172 வாக்குகள், பெற்றிருந்தனர்.
2004 மக்களவை தேர்தல் முடிவுகள்
திமுக சார்பில் வெங்கட கணபதி 400,059 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். அதிமுகவின் ராஜேந்திரன், 2,68,707 வாக்குகள்,
1999 மக்களவை தேர்தல் முடிவுகள்
திமுகவின் ஆதி சங்கர் 358,367 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். அதிமுக சார்பில், தாமோதரன், 2,84,414 வாக்குகள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வெங்கடேன், 65467 வாக்குகள் பெற்றிருந்தார்.
1998 மக்களவை தேர்தல் முடிவுகள்
அதிமுகவின் தாமோதரன், 309,985 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வெங்கடேசன், 282856 வாக்குகள், காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராமதாஸ், 40603 வாக்குகள் பெற்றிருந்தார்.
1996 மக்களவை தேர்தல் முடிவுகள்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வெங்கடேசன் 389,660 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் சத்யமூர்த்தி 1,84,456 வாக்குகள், மதிமுகவின் சபாபதி மோகன் 55110 வாக்குகள், பா.ஜ.க.வின் அப்பர்சாமி7845 வாக்குகள் பெற்றிருந்தனர்.
1991 மக்களவை தேர்தல் முடிவுகள்
காங்கிரஸ் கட்சியின் கலியபெருமாள், 360445 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். ஜனதா தல் சார்பில், 152388 வாக்குகள், பாமக சார்பில், சின்னதுரை, 82416 வாக்குகள், பாஜகவின் கோதண்டபாணி 10234 வாக்குகள் பெற்றிருந்தனர்.
1989 மக்களவை தேர்தல் முடிவுகள்
காங்கிரஸ் கட்சியின் பி.ஆர்.எஸ் வெங்கடேசன், 331617 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். திமுகவின் பாஸ்கரன், 214782 வாக்குகள், பாமகவின் வி.ஆர். தண்டபாணி 99814 வாக்குகள் பெற்றிருந்தனர்.
1984 மக்களவை தேர்தல் முடிவுகள்
காங்கிரஸ் கட்சியின் பி.ஆர்.எஸ் வெங்கடேசன் 327,393 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்த நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் கிள்ளிவளவன், 195439 வாக்குகள் பெற்றிருந்தார்.
1980 மக்களவை தேர்தல் முடிவுகள்
காங்கிரஸ் கட்சியின் முத்துக்குமாரன், 262694 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்த நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அரவிந்த பால பஜனோர் 154043 வாக்குகள் பெற்றார்.
1977 மக்களவை தேர்தல் முடிவுகள்
காங்கிரஸ் கட்சியின் பூவராகன், 231128 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்த நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட, காங்கிரஸ் கட்சியின் ஆர்கனைசர் பிரிவின், ராதாகிருஷ்ணன், 142071 வாக்குகள் பெற்றிருந்தார்.
1971 மக்களவை தேர்தல் முடிவுகள்
காங்கிரஸ் கட்சியின் பூவராகன், 229934 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்த நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட, காங்கிரஸ் கட்சியின் ஆர்கனைசர் பிரிவின், முத்துக்குமாரன், 193447 வாக்குகள் பெற்றிருந்தார்.
1967 மக்களவை தேர்தல் முடிவுகள்
திமுக சார்பில் போட்டியிட்ட வி.கே.கவுண்டர் 225571 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் ராதாகிருஷ்ணன், 177598 வாக்குகள் பெற்றிருந்தார்.
1962 மக்களவை தேர்தல் முடிவுகள்
திமுகவின் ராமபத்ர நாயுடு 160811 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முத்துகுமாரசுவாமி நாயுடு 125424 வாக்குகள் பெற்றிருந்தார்.
1957 மக்களவை தேர்தல் முடிவகள்
சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட முத்துகுமாரசுவாமி நாயுடு 98605 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் ராதாகிருஷ்ணன், 98546 வாக்குகள் பெற்றிருந்தார்.
1951 மக்களவை தேர்தல் முடிவுகள்
தமிழ்நாடு டெய்லர் பார்ட்டி சார்பில் போட்டியிட்ட, கோவிந்தசாமி கச்சிராயர் 186,894 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் கனகசபை, 164985 வாக்குகள், இளையபெருமாள் 156488 வாக்குகள், தமிழ்நாடு டெய்லர் பார்ட்டி ராஜாங்கம் 144625 வாக்குகள் பெற்றிருந்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.