கள்ளக்குறிச்சி மக்களவை தேர்தல் முடிவுகள் – 2024
39 மக்களவை தொகுதிகளை கொண்ட தமிழ்நாட்டில் 14-வது தொகுதி கள்ளக்குறிச்சி. இந்த தொகுதியில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதி நடைபெற்றது.
இந்த கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 மற்றும் சேலம் மாவட்டத்தில் 3 என 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் சங்கராபுரம், ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி, ஏற்காடு, கெங்குவல்லி, ஆத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி தொகுதி பிரிக்கப்பட்டு முதல் முறையாக கடந்த 2009-ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.
அதற்கு முன்பு இந்திய பொதுத்தேர்தல் 1967 மற்றும் 1971 என இரண்டுமுறை நடைபெற்றுள்ளது. இந்த இரண்டு தேர்தல்களிலுமே திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிட்ட தேவகன் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். தற்போது 2024 இந்திய மக்களவை தேர்தலில், இந்தியா கூட்டணியின் தி.மு.க. சார்பில் மலையரசன், என்.டி.ஏ கூட்டணியில் பா.ம.க. சார்பில் தேவதாஸ், அ.தி.மு.க கூட்டணியில் குமரகுர, நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜெகதீச பாண்டியன் போட்டியிடுகின்றனர்.
கள்ளக்குறிச்சி தொகுதியில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி நடந்த வாக்குப்பதிவில் 79.21 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு நிலவரங்கள் இந்தியா கூட்டணிக்கு சாதகமான அமைந்தது.
ஜூன் 4-ந் தேதி வெளியாக உள்ள மக்களவை தேர்தலுக்கான முடிவுகளை தெரிந்துகொள்ள இந்த செய்திக்குப்புடன் இணைந்திருங்கள்.
காலை 9 மணி நிலவரப்படி கள்ளக்குறிச்சி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் மலையரசன் முன்னிலை பெற்றிருந்த நிலையில், அடுத்த சில நிமிடங்களில் அ.தி.மு.க வேட்பாளர் குமரகுரு முன்னிலை பெற்றார்.
காலை 10 மணி நிலரப்படி திமுக வேட்பாளர் மலையரசனை விட அதிமுக வேட்பாளர் குமரகுரு 400 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
12.15 நிலவரப்படி கள்ளக்குறிச்சி தொகுதியில், தி.மு.க சார்பில் போட்டியிட்ட மலையரசன் 231288 வாக்குகளும், அதிமுகவின் குமரகுரு 206814 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் மலையரசன் 556659 பெற்று முன்னிலை பெற்றுள்ள நிலையில், அரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் குமரகுரு 504172 வாக்குகள் பெற்றுள்ள பின்தங்கியுள்ளார்.
பாமக வேட்பாளரை முந்திய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
கள்ளக்குறிச்சி தொகுதியில் பத்தாவது சுற்று முடிவில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீசனை விட, பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட தேவதாஸ் ராமசாமி 383 வாக்குகள் குறைவாக பெற்று நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
பிற்பகல் 3.30 மணி நிலவரப்படி
கள்ளக்குறிச்சி தொகுதியில், திமுகவின் மலையரசன், 455386 வாக்குகள், அதிமுகவின் குமரகுரு 410879 வாக்குகள், நாம் தமழர் கட்சியின் ஜெகதீசன் 58728 வாக்குகள், பாஜக கூட்டணியில் பாமகவின் தேவதாஸ் 58345 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் திமுகவின் மலையரசன் 44507 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
தி.மு.க மலையரசன் வெற்றி
கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் மலையரசன் 556659 பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில், அரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் குமரகுரு 504172 வாக்குகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தார். பாமக வேட்பாளர் தேவதாஸை பின்னுக்கு தள்ளி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீசன் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி கடந்த கால தேர்தல் முடிவுகள்
2019 மக்களவை தேர்தல் முடிவுகள்
கௌதம் சிகாமணி (தி.மு.க) 721,713 வாக்குகளும், எல்.கே.சுதீஷ் (தே.மு.தி.க) 3,21,794 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் சர்ப்புதீன் 50,179 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் கணேஷ் 14,587 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதில் தி.மு.க.வின் கௌதம் சிகாமணி வெற்றி பெற்றிருந்தார்.
2014 மக்களவை தேர்தல் முடிவுகள்
அ.தி.மு.க.வின் காமராஜ், 533,383 வாக்குகளும், தி.மு.க.வின் மணிமாறன், 309,876 வாக்குகளும், தே.மு.தி.க.வின் ஈஸ்வரன் 164,183 வாக்குகளும், காங்கிரஸ் கட்சியின் தேவதாஸ், 39,677 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதில் அ.தி.மு.க.வின் காமராஜ் வெற்றி பெற்றிருந்தார்.
2009 மக்களவை தேர்தல் முடிவுகள்
தி.மு.க.வின் ஆதி சங்கர், 363,601 வாக்குகளும், பா.ம.க.வின் தனராஜூ254,993 வாக்குகளும், தே.மு.தி.க.வின் எல்.கே.சுதீஷ் 1,32,223 வாக்குகளும், கொங்குநாடு முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்ட ரமேஷ் 17818 வாக்குகள் பெற்றிருந்தனர். இதில் தி.மு.க.வின் ஆதி சங்கர் வெற்றி பெற்றிருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.