பெரம்பலூர் மக்களவை தொகுதி தேர்தல் முடிவுகள் – 2024
39 மக்களவை தொகுதிகள் கொண்ட தமிழ்நாட்டில், 25-வது தொகுதி பெரம்பலூர். 2024-ம் ஆண்டில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 4 பெரம்பலூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் தலா ஒரு தொகுதி என 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி.
கரூர் மாவட்டத்தில் குளித்தலை, திருச்சி மாவட்டத்தில், லால்குடி, துறையூர், மனச்சநல்லூர், முசிறி, பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் என 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கும். திராவிட கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் பெரம்பலூர் மக்களவை தொகுதியில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பும், திராவிட கட்சிகளுக்கு ஆதரவாகவே இருந்து வருகிறது.
2024 மக்களவை தேர்தலில், அதிமுக சார்பில் என்.டி. சந்திரமோகன், திமுக சார்பில் அருண் நேரு, பாஜக சார்பில் பாரிவேந்தர், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தேன்மொழி ஆகியோர் போட்டியிடுகின்றனர். கடந்த ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற்ற மக்களவை தேர்தலில், பெரம்பலூர் தொகுதியில், 77.43 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
ஜூன் 4-ந் தேதி நடைபெறும் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை குறித்த அப்டேட்களை தெரிந்துகொள்ள இந்த செய்திக்குறிப்புடன் இணைந்திருங்கள்.
காலை 8.45 நிலவரப்படி பெரம்பலூர் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட அருண் நேரு முன்னிலை பெற்றுள்ளார்.
காலை 10 மணி நிலவரப்படி பெரம்பலூர் தொகுதியில், தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
பெரம்பலூரில் திமுக வேட்பாளர் அருண் நேரு முன்னிலை
திமுக - 29,276
அதிமுக -10,464
பிஜேபி - 7,927
நாம் தமிழர் - 5,691
பெரம்பலூர் தொகுதி மூன்றாம் சுற்று நிலவரம் :
முன்னிலை- திமுக- 52,302
திமுக வேட்பாளர் அருண்நேரு- 78,973
அதிமுக வேட்பாளர் சந்திரமோகன்- 26,671
பாஜக வேட்பாளர்(IJK) பாரிவேந்தர்- 21,074
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேன்மொழி- 15,143
பெரம்பலூரில் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு முன்னிலை:
திமுக அருண் நேரு: 78587
அதிமுக சந்திரமோகன்: 26809
பாஜக பாரிவேந்தர்: 21123
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி
அமைச்சர் கே என் நேருவின் மகன் அருண் நேரு 79 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை
தி.மு.க.வேட்பாளரும், திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே என் நேருவின் மகன் கே.என்.அருண் நேரு 79742 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றிக் கோப்பையை நெருங்கி இருக்கிறார்.
தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண்நேரு -118062.
அ.தி.மு.க.வேட்பாளர் சந்திரமோகன் - 38320.
ஐ.ஜே.கே.(பா.ஜ.க.)வேட்பாளர் பாரிவேந்தர் -32030.
நாம் தமிழர். வேட்பாளர் தேன்மொழி -22294.
79742 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் கே.என்.அருண்நேரு 4 - வது சுற்றிலும் முன்னிலையில் உள்ளார்.
12- வது சுற்று பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி
தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண் நேரு , 12 - வது சுற்று முடிவில் முன்னிலை.
தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண்நேரு - 358306.
அ.தி.மு.க.வேட்பாளர் சந்திரமோகன் - 128348.
ஐ.ஜே.கே.(பா.ஜ.க.)வேட்பாளர் பாரிவேந்தர் - 97026.
நாம் தமிழர். வேட்பாளர் தேன்மொழி - 67992.
2,29,958 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் கே.என்.அருண்நேரு 12- வது சுற்றில் முன்னிலையில் உள்ளார்.
14- வது சுற்று பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி
தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண் நேரு , 14 - வது சுற்று முடிவில் முன்னிலை.
தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண்நேரு - 422495.
அ.தி.மு.க.வேட்பாளர் சந்திரமோகன் - 148705.
ஐ.ஜே.கே.(பா.ஜ.க.)வேட்பாளர் பாரிவேந்தர் - 112556.
நாம் தமிழர். வேட்பாளர் தேன்மொழி - 78778.
2,73,790 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் கே.என்.அருண்நேரு 14- வது சுற்றில் முன்னிலையில் உள்ளார்.
18 - வது சுற்றில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி
தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண் நேரு முன்னிலை.
தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண்நேரு - 546807
அ.தி.மு.க.வேட்பாளர் சந்திரமோகன் - 190799.
ஐ.ஜே.கே.(பா.ஜ.க.)வேட்பாளர் பாரிவேந்தர் - 144574.
நாம் தமிழர். வேட்பாளர் தேன்மொழி - 102676.
3,56,008 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் கே.என்.அருண்நேரு 18 - வது சுற்றில் முன்னிலையில் உள்ளார்.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி
தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண் நேரு , 20 - வது சுற்று முடிவில் முன்னிலை.
தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண்நேரு - 579435.
அ.தி.மு.க.வேட்பாளர் சந்திரமோகன் - 205283.
ஐ.ஜே.கே.(பா.ஜ.க.)வேட்பாளர் பாரிவேந்தர் - 154802.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேன்மொழி - 108729.
3,74,152 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் கே.என்.அருண்நேரு 20 - வது சுற்றில் முன்னிலையில் உள்ளார்.
அருண் நேரு வெற்றி : டெபாசிட் இழந்த பாரிவேந்தர்
பெரம்பலூர் தொகுதியில், தொடக்கத்தில் இருந்தே திமுக வேட்பாளர் அருண் நேரு முன்னிலை வகித்த நிலையில், இறுதியாக பாஜக சார்பில் போட்டியிட்ட பாரிவேந்தரை 421941 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். திமுக கூட்டணியில் கடந்த தேர்தலில் 4 லட்சத்திற்கு அதிகமாக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்த பாரிவேந்தர் தற்போது அதே வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளார். மேலும் இந்த தேர்தலில் டெபாசிட்டையும் இழந்துள்ளார்.
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் கடந்த கால தேர்தல் நிலவரங்கள்
2019 மக்களவை தேர்தல் முடிவுகள்
திமுக கூட்டயில் இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர், 683,697 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், அதிமுக சார்பில் சிவபதி, 280179 வாக்குகள், நாம் தமிழர் கட்சியின் சாந்தினி, 53545 வாக்குகள், பெற்றிருந்தனர்.
2014 மக்களவை தேர்தல் முடிவுகள்
அதிமுகவின் மருதராஜா, 462693 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்த நிலையில், திமுகவின் சீமனூர் பிரபு, 249645 வாக்குகள், பாஜகவின் பாரிவேந்தர் 238887 வாக்குகள், காங்கிரஸ் கட்சியின் ராஜசேகரன், 31998 வாக்குகள் பெற்றிருந்தனர்.
2009 மக்களவை தேர்தல் முடிவுகள்
திமுகவின் நெப்போலியன், 398742 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், அதிமுகவின் பாலசுப்பிரமணியன், 321138 வாக்குகள், தேமுதிகவின் காமராஜ் துரை, 74317 வாக்குகள் பெற்றிருந்தனர்.
2004 மக்களவை தேர்தல் முடிவுகள்
திமுகவின் அ.ராசா, 389708 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்த நிலையில், அதிமுகவின் டாக்டர் சுந்தரம், 236375 வாக்குகள், ஜனதா தல் கணேசன், 47041 வாக்குகள் பெற்றிருந்தனர்.
1999 மக்களவை தேர்தல் முடிவுகள்
திமுகவின் அ.ராசா, 330675 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்த நிலையில், அதிமுகவின் ராஜரத்தினம், 262624 வாக்குகள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பெரியசாமி 85209 வாக்குகள் பெற்றிருந்தனர்.
1998 மக்களவை தேர்தல் முடிவுகள்
அதிமுகவின் ராஜரத்தினம், 341118 வாக்குகள் வெற்றி பெற்றிருந்த நிலையில், திமுகவின் அ.ராசா, 280682 வாக்குகள், காங்கிரஸ் கட்சியின் சுப்பிரமணியன், 16579 வாக்குகள் பெற்றிருந்தனர்.
1996 மக்களவை தேர்தல் முடிவுகள்
திமுகவின் அ.ராசா, 399079 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் சுப்பிரமணியன், 184832 வாக்குகள், மதிமுகவின் துரைராஜன், 53782 வாக்குகள், பாஜகவின் மூர்த்தி 7778 வாக்குகள் பெற்றிருந்தனர்.
1991 மக்களவை தேர்தல் முடிவுகள்
அதிமுகவின் அசோக் ராஜ், 375430 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்த நிலையில், திமுகவின் ராமசுவாமி 180480 வாக்குகள், பாமகவின் சிவஞானமணி 77831 வாக்குகள் பெற்றிருந்தனர்.
1989 மக்களவை தேர்தல் முடிவுகள்
அதிமுகவின் அசோக் ராஜ், 357565 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்த நிலையில், திமுகவின் புனோவி கருத்தழன் 221389 வாக்குகள், பாமகவின் ஜான் பாண்டியன், 83933 வாக்குகள் பெற்றிருந்தனர்.
1984 மக்களவை தேர்தல் முடிவுகள்
அதிமுகவின் தங்கராசு, 350549 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்த நிலையில், திமுகவின் தியாகராஜன், 197780 வாக்குகள் பெற்றிருந்தார்.
1980 மக்களவை தேர்தல் முடிவுகள்
காங்கிரஸ் கட்சியின் கே.பி.எஸ்.மணி, 282767 வாக்குகள், பெற்று வெற்றி பெற்றிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தங்கராசு, 183595 வாக்குகள் பெற்றிருந்தார்.
1977 மக்களவை தேர்தல் முடிவுகள்
அதிமுகவின் அசோக் ராஜ், 326046 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்த நிலையில், திமுகவின் ராஜூ, 146019 வாக்குகள் பெற்றிருந்தார்.
1971 மக்களவை தேர்தல் முடிவுகள்
திமுகவின் துரைாஜூ 258724 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் அய்யாக்கண்ணு, 197155 வாக்குகள் பெற்றிருந்தார்
1967 மக்களவை தேர்தல் முடிவுகள்
திமுகவின் துரைாஜூ 229941 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் பி.கே.ரங்கசாமி, 193113 வாக்குகள் பெற்றிருந்தார்.
1962 மக்களவை தேர்தல் முடிவகள்
திமுகவின் இரா செழியன், 188926 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் பழனியாண்டி 133536 வாக்குகள் பெற்றிருந்தார்.
1957 மக்களவை தேர்தல் முடிவுகள்
காங்கிரஸ் கட்சியின் பழனியாண்டி, 112497 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்களை தோற்கடித்தார்.
1951 மக்களவை தேர்தல் முடிவகள்
தமிழ்நாடு டெயிலர்ஸ் பார்ட்டி சார்பில், பூவராகவசாமி படையாச்சி, 84332 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் கிருஷ்ணசாமி ரெட்டியார் 65443 வாக்குகள் பெற்றிருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.