சேலம் மக்களவை தொகுதி தேர்தல் முடிவுகள் – 2024
39 மக்களவை தொகுதிகளை கொண்ட தமிழ்நாட்டில் 15-வது தொகுதி சேலம். கடந்த ஏப்ரல் 19-ந் தேதி இந்த தொகுதியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதி நடைபெற்றது.
சேலம் மக்களவை தொகுதி 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி என சேலம் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகள் இதில் உள்ளன. இந்த தொகுதியில் இதுவரை திராவிட கட்சிகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். கடந்த 1951 முதல் சேலம் தொகுதியில் மக்களவை தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.
2024 மக்களவை தேர்தலில் சேலம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், தி.மு.க. சார்பில் செல்வ கணபதி, அ.தி.மு.க. சார்பில் விக்ணேஷ், பா.ம.க சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர் கட்சியின் சார்பில் மனோஜ் குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். கடந்த ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற்ற மக்களவை தேர்தலில் சேலம் தொகுதியில், 78.16 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த தொகுதியில் அ.தி.மு.க ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் 4-ந் தேதி நடைபெறும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள தெரிந்துகொள்ள இந்த செய்திக்குறிப்பில் இணைந்திருங்கள்.
காலை 9 மணி நிலவரப்படி சேலம் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் செல்வகணபதி முன்னிலை பெற்றுள்ளார்.
காலை 10 மணி நிலவரப்படி தி.மு.க. வேட்பாளர் செல்வ கணபதி 30128 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்று வருகிறார்.
மதியம் 1 மணி நிலவரப்படி சேலம் தொகுதியில், போட்டியிட்ட திமுக வேட்பாளர் செல்வ கணபதி 7331 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
பிற்பகல் 4 மணி நிலவரப்படி
சேலம் தொகுதியில், திமுகவின் செல்வ கணபதி 215402 வாக்குகள், அதிமுகவின் விக்னேஷ் 185373 வாக்குகள், பாமகவின் அண்ணாதுரை 50730 வாக்குகள், நாம் தமிழர் கட்சியின் மனோஜ்குமார் 30174 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் திமுகவின் செல்வ கணபதி 30029 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
திமுகவின் செல்வ கணபதி வெற்றி
இறுதிக்கட்ட வாக்குப்பதிவில் திமுக வேட்பாளர் செல்வ கணபதி 561566 பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் விக்னேஷ் 492693 வாக்குகளும், பாமகவின் தங்கபச்சான் 120596 வாக்குகளும் பெற்று 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்தனர்.
சேலம் மக்களவை தொகுதியின் கடந்த கால தேர்தல் முடிவுகள்
2019 மக்களவை தேர்தல் முடிவுகள்
திமுகவின் பார்த்திபன், 606,302 வாக்குகள், அதிமுகவின் சரவணன், 459,376 வாக்குகள், மக்கள் நீதி மய்யம் பிரபு மணிகண்டன் முதலியார் 58,662 வாக்குகள், நாம் தமிழர் கட்சியின் ராசா 33,890 வாக்குகள் பெற்றிருந்தனர். இதில் திமுகவின் பார்த்திபன் வெற்றி பெற்றிருந்தார்.
2014 மக்களவை தேர்தல் முடிவுகள்
அதிமுகவின் பன்னீர்செல்வம், 556,546 வாக்குகள், திமுகவின் உமாராணி, 2,88,936 வாக்குகள், தேமுதிகவின் எல்.கே.சுதீஷ் 201,265 வாக்குகள், காங்கிரஸ் கட்சியின் ரங்கராஜன் குமாரமங்கலம், 46477 வாக்குகள், பெற்றிருந்தனர். இதில் அதிமுகவின் பன்னீர்செல்வம் வெற்றி பெற்றிருந்தார்.
2009 மக்களவை தேர்தல் முடிவுகள்
அதிமுகவின் செம்மலை 380,460 வாக்குகள், காங்கிரஸ் கட்சியின் தங்கபாலு, 33,969 வாக்குகள், தேமுதிகவின் மோகன்ராஜ், 120,325 வாக்குகள் பெற்றிருந்தனர். இதில் அதிமுகவின் செம்மலை வெற்றி பெற்றிருந்தார்.
2004 மக்களவை தேர்தல் முடிவுகள்
காங்கிரஸ் கட்சியின் தங்கபாலு, 444,591 வாக்குகள், அதிமுகவின் ராஜசேகரன், 2,68,964 வாக்குகள் பெற்றிருந்தனர். இதில் காங்கிரஸ் கட்சியின் தங்கபாலு வெற்றி பெற்றிருந்தார்.
1999 மக்களவை தேர்தல் முடிவுகள்
அதிமுகவின் செல்வகணபதி, 363,689 வாக்குகள், தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சியின் வாழப்பாடி ராமமூர்த்தி 338,278 வாக்குகள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேவதாஸ், 19604 வாக்குகள் பெற்றிருந்தனர். இதில் அதிமுகவின் செல்வகணபதி வெற்றி பெற்றிருந்தார்.
1998 மக்களவை தேர்தல் முடிவுகள்
சுயேச்சையாக போட்டியிட்ட வாழப்பாடி ராமமூர்த்தி 365,557 வாக்குகள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேவதாஸ், 229,667 வாக்குகள், காங்கிரஸ் கட்சியின் தங்கபாலு, 48,027 வாக்குகள், பெற்றிருந்தனர். இதில் சுயேச்சை வேட்பாளர் வாழப்பாடி ராமமூர்த்தி வெற்றி பெற்றிருந்தார்.
1996 மக்களவை தேர்தல் முடிவுகள்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேவதாஸ், 315,277 வாக்குகள், காங்கிரஸ் கட்சியின் தங்கபாலு, 1,94,392 வாக்குகள், பாஜக சார்பில் ராஜாமணி 9538 வாக்குகள், மதிமுக சார்பில் மோகன்ராஜ், 6245 வாக்குகள் பெற்றிருந்தனர். இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேவதாஸ் வெற்றி பெற்றிருந்தார்.
1991 மக்களவை தேர்தல் முடிவுகள்
காங்கிரஸ் கட்சியின், ரங்கராஜன் குமாரமங்கலம், 406,042 வாக்குகள், திமுகவின் அர்த்தநாரி சாமி 1,23,474 வாக்குகள், பாமக சார்பில் அர்ஜூனன், 56,775 வாக்குகள், பாஜக சார்பில் ராமநாதன்7,867 வாக்குகள் பெற்றிருந்தனர். இதில் காங்கிரஸ் கட்சியின், ரங்கராஜன் குமாரமங்கலம் வெற்றி பெற்றிருந்தார்.
1989 மக்களவை தேர்தல் முடிவுகள்
காங்கிரஸ் கட்சியின், ரங்கராஜன் குமாரமங்கலம் 400,936 வாக்குகள், திமுகவின் கார்த்திகேயன் 159,166 வாக்குகள், பாமக சார்பில் சதாசிவம், 85,628 வாக்குகள் பெற்றிருந்தனர். இதில் காங்கிரஸ் கட்சியின், ரங்கராஜன் குமாரமங்கலம் வெற்றி பெற்றிருந்தார்.
1984 மக்களவை தேர்தல் முடிவுகள்
காங்கிரஸ் கட்சியின், ரங்கராஜன் குமாரமங்கலம் 359,819 வாக்குகள் பெற்றிருந்தார். ஜனதா பார்ட்டியின் சார்பில் போட்டியிட்ட கந்தசாமி 1,23,644 வாக்குகள் பெற்றிருந்தார். இதில் காங்கிரஸ் கட்சியின், ரங்கராஜன் குமாரமங்கலம் வெற்றி பெற்றிருந்தார்.
1980 மக்களவை தேர்தல் முடிவுகள்
திமுகவின் சந்திரகுமார், 233,971 வாக்குகள், அதிமுகவின் கண்ணன், 2,07,213 வாக்குகள், காங்கிரஸ் சார்பில் காந்திநாதன், 5381 வாக்குகள் பெற்றிருந்தார். இதில் திமுகவின் சந்திரகுமார் வெற்றி பெற்றிருந்தார்.
1977 மக்களவை தேர்தல் முடிவுகள்
அதிமுக சார்பில் கண்ணன், 254,138 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். திமுக சார்பில் ராஜாராம், 1,74,534 வாக்குகள் பெற்றிருந்தார்.
1971 மக்களவை தேர்தல் முடிவுகள்
திமுகவின் கிருஷ்ணன், 230, 736 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். காங்கிரஸ் கட்சியின் சுப்பிரமணியன், 1,75,940 வாக்குகள் பெற்றிருந்தார். அகில இந்திய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் லட்சுமணன், 3944 வாக்குகள் பெற்றார்.
1967 மக்களவை தேர்தல் முடிவுகள்
திமுகவின் ராஜராம், 219,380 வாக்குகள், காங்கிரஸ் கட்சியின்1,55,871 வாக்குகள், அகில இந்திய பாரதிய ஜனதா கட்சியின் ராவ்9168 வாக்குகள் பெற்றிருந்தனர்.
1962 மக்களவை தேர்தல் முடிவுகள்
காங்கிரஸ் கட்சியின் ராமசாமி 147,525 வாக்குகள், திமுக சார்பில் 1,35,787 வாக்குகள், அகில இந்திய பாரதிய ஜனதா கட்சியின் ஸ்ரீனிவாசன், 4581 வாக்குகள் பெற்றிருந்தனர்.
1957 மற்றும் 1951 மக்களவை தேர்தல் முடிவுகள்
1957 தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் எஸ்.வி.ராமசாமி, 85,342 வாக்குகள் பெற்றிருந்தார். மற்ற அனைவரும் சுயேச்சை வேட்பாளர்கள். அதேபோல் 1951 தேர்தலிலும், எஸ்.வி.ராமசாமி 90, 570 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.