திருச்சிராப்பள்ளி மக்களவை தேர்தல் முடிவுகள் – 2024
39 மக்களவை தொகுதிகள் கொண்ட தமிழ்நாட்டில், 24-வது தொகுதி திருச்சிராப்பள்ளி. 2024-ம் ஆண்டில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 4 மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 என 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற தொகுதி.
ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் திருச்சி மாவட்டத்திலும், கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை என 2 சட்டமன்ற தொகுதிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் என 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கும். திராவிட கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் திருச்சிராப்பள்ளி மக்களவை தொகுதியில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பும், திராவிட கட்சிகளுக்கு ஆதரவாகவே இருந்து வருகிறது.
2024 மக்களவை தேர்தலில், இந்தியா கூட்டணியில் மதிமுக கட்சியின் சார்பில், துரை வைகோ, அதிமுக சார்பில் கருப்பையா, பா.ஜக. கூட்டணியில், அமமுக சார்பில், செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் ராகஜேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். கடந்த ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற்ற மக்களவை தேர்தலில், திருச்சிராப்பள்ளி தொகுதியில், 67.51 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
ஜூன் 4-ந் தேதி நடைபெறும் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை குறித்த அப்டேட்களை தெரிந்துகொள்ள இந்த செய்திக்குறிப்புடன் இணைந்திருங்கள்.
காலை 8.30 மணி நிலவரப்படி தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ முன்னிலை பெற்றுள்ளார்.
திருச்சியில் துரை வைகோ பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
திருச்சி மக்களவைத் தொகுதியில், தபால் வாக்குகளில் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட மதிமுகவுக்கும், நாம் தமிழர் கட்சியின் மைக் சின்னத்துக்கும் அதிகளவு வாக்குகள் பதிவாகி உள்ளது.
ஒன்பது முப்பது மணி நிலவரப்படி திருச்சியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ முன்னணி வகித்து வருகிறார்.
திருச்சி: 9.30 மணி நிலவரம்)
திமுக கூட்டணி (மதிமுக துரை வைகோ) :- 20,773
அதிமுக (கருப்பையா) :- 10395
பாஜக கூட்டணி (அமமுக - செந்தில் நாதன்):- 3500
நாதக :-(ராஜேஷ்) - 5069
திருச்சி பாராளுமன்ற தொகுதி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் மேஜை ஐந்தில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரத்தை வாக்குப்பதிவு நடந்த அன்று முழுமையாக மூடப்படவில்லை என முகவர்கள் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், அதில் பதிவான வாக்குகளை எண்ணாமல் நிறுத்தப்பட்டுள்ளது.
காலை 10 மணி நிலவரப்படி திருச்சி தொகுதியில் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.
திருச்சி தொகுதி
5-வது சுற்று வாக்கு எண்ணிக்கையில்
மதிமுக துரை வைகோ 1, 24, 648
அதிமுக கருப்பையா 57, 915
அமமுக செந்தில்நாதன் 23, 588
நாதக ராஜேஷ் 26, 285
66, 733 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் துரை வைகோ தொடர்ந்து முன்னிலை.
4 மணி நிலவரப்படி
திருச்சி தொகுதியில் இந்தியா கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ 271900 வாக்குகள், அதிமுகவின் கருப்பையா 115561 வாக்குகள், அமமுகவின் செந்தில் நாதன் 58072 வாக்குகள், நாம் தமிழர் கட்சியின் ராஜேஷ் 52763 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் மதிமுகவின் துரை வைகோ 156339 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
திருச்சி பாராளுமன்ற தொகுதி நிலவரம் -
மதிமுக - 3,43,418
அதிமுக - 1,39,400
அமமுக - 68,947
நாதக - 64,513
திருச்சியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ சுமார் 2 லட்சத்து ஐயாயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் இருக்கின்றார்.
திருச்சி பாராளுமன்ற தொகுதி இறுதிச்சுற்று.
மதிமுக வேட்பாளர் துரைவைகோ வெற்றி
மதிமுக - 538408
அதிமுக - 227326
அமமுக - 99453
நா.த.க - 106676
311082 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை கருப்பையாவைவிட மதிமுக வேட்பாளர் துரைவைகோ வெற்றி பெற்றார்.
திருச்சிராப்பள்ளி மக்களவை தொகுதியில் கடந்த கால தேர்தல் நிலவரங்கள்
2019 மக்களவை தேர்தல் முடிவுகள்
காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர் 621285 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். தேமுதிக சார்பில் இளங்கோவன், 161999 வாக்குகள், நாம் தமிழர் கட்சியின் வினோத் 65286 வாக்குகள், மக்கள் நீதிமய்யம் கட்சியின் ஆனந்த ராஜா 42134 வாக்குகள் பெற்றிருந்தனர்.
2014 மக்களவை தேர்தல் முடிவுகள்
அதிமுகவின் குமார் 458478 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், திமுகவின் அன்பழகன், 308002 வாக்குகள், தேமுதிகவின் விஜயககுமார் 94785 வாக்குகள், காங்கிரஸ் கட்சியின் சாருபாலா தொண்டைமான் 51537 வாக்குகள் பெற்றிருந்தனர்
2009 மக்களவை தேர்தல் முடிவுகள்
அதிமுகவின் குமார் 2,98,710 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் கட்சியின் சாருபாலா தொண்டைமான் 294375 வாக்குகள், தேமுதிகவின் விஜயககுமார் 61742 வாக்குகள், பாஜகவின் லலிதா குமாரமங்கலம், 30329 வாக்குகள் பெற்றிருந்தனர்.
2004 மக்களவை தேர்தல் முடிவுகள்
மதிமுகவின் எல்.கணேசன் 450,907 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், அதிமுகவின் பரஞ்ஜோதி, 234182 வாக்குகள், பெற்றிருந்தனர்.
1999 மக்களவை தேர்தல் முடிவுகள்
பாஜகவின் ரங்கராஜன் குமாரமங்கலம், 377450 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடைக்கல ராஜ், 288253 வாக்குகள், தமிழ் மாநில காங்கிரஸ் ராஜசேகரன் 17256 வாக்குகள் பெற்றிருந்தனர்.
1998 மக்களவை தேர்தல் முடிவுகள்
பாஜகவின் ரங்கராஜன் குமாரமங்கலம் 305233 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்த நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அடைக்கலராஜ், 293778 வாக்குகள், காங்கிரஸ் கட்சியின் சுபா சோமு 23747 வாக்குகள் பெற்றிருந்தனர்.
1996 மக்களவை தேர்தல் முடிவுகள்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அடைக்கலராஜ் 434149 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் டாக்டர் கோபால், 169441 வாக்குகள், கம்யூனிஸ்ட் கட்சியின் ரங்கராஜன் 52185 வாக்குகள், பாஜகவின் தனபாலன், 14778 வாக்குகள் பெற்றிருந்தனர்.
1991 மக்களவை தேர்தல் முடிவுகள்
காங்கிரஸ் கட்சியின் அடைக்கலராஜ் 414628 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியின் ரங்கராஜன், 204992 வாக்குகள், பாஜகவின் பார்த்த சாரதி 13872 வாக்குகள் பெற்றிருந்தனர்.
1989 மக்களவை தேர்தல் முடிவுகள்
காங்கிரஸ் கட்சியின் அடைக்கலராஜ் 429185 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியின் ரங்கராஜன், 259219 வாக்குகள் பெற்றிருந்தனர்.
1984 மக்களவை தேர்தல் முடிவுகள்
காங்கிரஸ் கட்சியின் அடைக்கலராஜ் 337786 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்த நிலையில், திமுகவின் செல்வராஜ், 234881 வாக்குகள் பெற்றிருந்தார்.
1980 மக்களவை தேர்தல் முடிவுகள்
திமுகவின் செல்வராஜ் 278485 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியின் ரங்கராஜன், 204886 வாக்குகள் பெற்றிருந்தார்.
1977 மக்களவை தேர்தல் முடிவுகள்
கம்யூனிஸ்ட் கட்சியின் கல்யாணசுந்தரம், 276390 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் வெங்கடேஷ்வர தீக்ஷிதர் 200345 வாக்குகள் பெற்றிருந்தார்.
1971 மக்களவை தேர்தல் முடிவுகள்
கம்யூனிஸ்ட் கட்சியின் கல்யாணசுந்தரம், 217677 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தங்கவேலு, 197127 வாக்குகள், மார்க்சிஸ்ட் கட்சியின் ஆனந்த நம்பியார் 26339 வாக்குகள் பெற்றிருந்தார்.
1967 மக்களவை தேர்தல் முடிவுகள்
மார்க்சிஸ்ட் கட்சியின் ஆனந்த நம்பியார் 202879 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முத்தையா 200334 வாக்குகள் பெற்றிருந்தார்,
1962 மக்களவை தேர்தல் முடிவுகள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனந்த நம்பியார் 156706 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் அப்துல் சலாம், 147332 வாக்குகள் பெற்றிருந்தார்.
1957 மக்களவை தேர்தல் முடிவுகள்
காங்கிரஸ் கட்சியின் அப்துல் சலாம் 91910 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனந்தன் நம்பியார் 50785 வாக்குகள் பெற்றிருந்தார்.
1952 மக்களவை தேர்தல் முடிவுகள்
சுயேச்சை வேட்பாளர் முத்துராமன், 94184 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஹலஸ்யாம் 77007 வாக்குகள் பெற்றிருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.