விழுப்புரம் மக்களவை தேர்தல் முடிவுகள் – 2024
39 மக்களவை தொகுதளை கொண்ட தமிழ்நாட்டில், 13-வது தொகுதி விழுப்புரம். கடந்த ஏப்ரல் 19-ந் தேதி இந்த தொகுதிக்கு வாக்குப்பதி நடைபெற்றது.
விழுப்புரம் தொகுதியில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 5 தொகுதிகள் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து ஒரு தொகுதி என மொத்தம் 6 சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கியுள்ளது. திண்டிவனம், வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோயிலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் விழுப்புரம் மாவட்டத்திலும், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்தும் சேர்க்ப்பட்டுள்ளது.
தமிழகத்தின் திராவிட கட்சிகளே தொடர்ந்து இந்த தொகுதியில் வெற்றி வாகை சூடியுள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாகவே வந்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு முதல் விழுப்புரம் மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. தனி தொகுதியான விழுப்புரம் தொகுதியில், 2009 மற்றும் 2014-ம் ஆண்டு அ.தி.மு.கவும், கடந்த 2019 தேர்தலில் தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளது.
2024 மக்களவை தேர்தலில் விழுப்புரம் தொகுதியில், இந்தியா கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், டி.ரவிக்குமார், பா.ம.க. சார்பில் முரளி சங்கர், அ.தி.மு.க.சார்பில் பாக்யராஜ், நாம் தமிழர் கட்சியின் சார்பில் களஞ்சியம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். கடந்த ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் விழுப்புரம் தொகுதியில் 76.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
ஜூன் 4-ந் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளை தெரிந்துகொள்ள இந்த செய்திக்குறிப்புடன் இணைந்திருங்கள்.
விழுப்புரம் தொகுதிக்கு உட்பட்ட கொத்தமங்கலம் பகுதியில் எந்திரகோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
காலை 9 மணி நிலவரப்படி விழுப்புரம் தொகுதியில் வி.சி.க வேட்பாளர் ரவிக்குமார் முன்னிலை பெற்றுள்ளார்.
விழுப்புரம் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை விழுப்புரம் அரசு கல்லூரி மையத்தில் காலை 8 மணிக்கு தொடங்கியது. விழுப்புரம் தொகுதிக்கான தபால் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. மொத்த தபால் வாக்குகள் 9001, இதில் 3895 முதியோர்கள் மற்றும் மாற்று திறனாளிகள், 437 ராணுவத்தினர்கள், 4669 காவல்துறையினர்கள் அடங்குவர்.
காலை 10 மணி நிலவரப்படி விழுப்புரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார்.
விழுப்புரம் தொகுதிக்கு உட்பட்ட எடச்சேரி பூத்தில் வாக்கு எந்திரம் பழுது காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி
முதல் சுற்று முடிவில்
விசிக: 22951
அதிமுக: 20930
பாமக: 9040
நாம் தமிழர்: 2619
விசிக வேட்பாளர் ரவிக்குமார் 2021 வாக்குகள் முன்னிலை.
விழுப்புரம் தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார் 45880 வாக்குகளும், அதிமுகவின் பாக்யராஜ் 41382 வாக்குகளும், பாமக 18670 வாக்குகள் பெற்றுள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி
நான்காம் சுற்று முடிவில்
விசிக: 89815
அதிமுக: 76820
பாமக: 36107
விசிக வேட்பாளர் ரவிக்குமார் 12995 வாக்குகள் முன்னிலை.
விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற பொது தேர்தல் வாக்கு எண்ணிக்கை 10-வது சுற்று முடிவு
துரை ரவிக்குமார் (வி.சி.கே) பானை சின்னம் 233419
காந்தலவாடி பாக்கியராஜ் (அதிமுக) இரட்டை இலை 184333
முரளி சங்கர் (பாமக) மாம்பழம் 81067
மு, களஞ்சியம் நாம் தமிழர் (மைக்) 29835
விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் துரை ரவிக்குமார் 49086 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
பிற்பகல் 3.30 மணி நிலவரப்படி
விழுப்புரம் தொகுதியில்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார், 332775 வாக்குகள், அதிமுகவின் பாக்யராஜ் 271284 வாக்குகள், பாட்டாளி மக்கள் கட்சியின் முரளி சங்கர் 126994 வாக்குகள், நாம் தமழர் கட்சியின் களஞ்சியம் 41265 வாக்குகள்,இதில் விசிகவின் ரவிக்குமார் 61491 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி
இறுதி சுற்று முடிவில்
விசிக: 477033
அதிமுக: 406330
பாமக: 181882
நாதக:- 57242
விசிக வேட்பாளர் ரவிக்குமார் 70703 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
விழுப்புரம் மக்களவை தொகுதி கடந்த கால தேர்தல் முடிவுகள்
2019 மக்களவை தேர்தல் முடிவுகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரவிக்குமார், 559,585 வாக்குகளும், பா.ம.க. சார்பில் போட்டியிட்ட வடிவேல் ராவணன், 431,517 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட, பிரகலதா, 24,609 வாக்குளும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் அன்பின் பொய்யாமொழி 17,891 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரவிக்குமார் வெற்றி பெற்றார்.
2014 மக்களவை தேர்தல் முடிவுகள்
அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜேந்திரன், 482,704 வாக்குகளும், தி.மு.க சார்பில் போட்டியிட்ட முத்தையன், 2,89,337 வாக்குகளும், தேமுதிக சார்பில் உமா சங்கர், 2,09,663 வாக்குகளும், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராணி 21,461 வாக்குகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட ஆணந்தன், 17404 வாக்களும் பெற்றிருந்தனர். இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜேந்திரன் வெற்றி பெற்றிருந்தார்.
2009 மக்களவை தேர்தல் முடிவுகள்
அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட முருகேசன் ஆணந்த்ன், 306,826 வாக்குகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சாமிதுரை, 3,04,029 வாக்குகளும், தேமுதிக சார்பில் கணபதி, 1,27476 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட முருகேசன் ஆணந்த்ன் வெற்றி பெற்றிருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.