தேனி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட தங்க தமிழ் செல்வன், அ.ம.மு.க தலைவர் டிடிவி தினகரனை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளதால் தேனி தொகுதி கவனம் ஈர்த்துள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு வரும் நிலையில், கடந்த மக்களை தேர்தல்களை போல் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. அந்த வகையில் தேனி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரனை விட முன்னிலை பெற்றுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்ததை தொடர்ந்து அ.தி.மு.கவில் பெரிய பிளவு ஏற்பட்டபோது பல முக்கிய பிரமுகர்கள் தி.மு.க மற்றும் அ.ம.மு.க கட்சியில் இணைந்தனர். அந்த வகையில் ஜெயலலிதா இறந்ததற்கு பிறகு அ.ம.மு.க கட்சியில் இணைந்தவர் தான் தங்க தமிழ்ச்செல்வன். அக்கட்சியின் தலைவர் டிடிவி தினகரனுடன் நெருக்கமாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் அடுத்து சில மாதங்களில் தி.மு.கவில் இணைந்தார்.
தொடர்ந்து கடந்த 2019 மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் தங்க தமிழ் செல்வன் தி.மு.க. சார்பில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஓ.பி.எஸ். மகன் ஒ.பி.ரவீந்திரன் வெற்றி பெற்ற நிலையில், நூலிழையில் தங்க தமிழ் செல்வன் வெற்றியை தவறவிட்டார் அதனைத் தொடர்ந்து 2024 நாடாளுமன்ற தேர்தலில் தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் தேனி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டார்.
25 ஆண்டுகளுக்குப் பின் தேனியில் மீண்டும் திமுக!#தேனியை_மீட்ட_திமுக pic.twitter.com/tz59Hohivi
— ThangaTamilSelvan (@ThangaTamilselv) June 4, 2024
இதே தொகுதியில், பா.ஜக. சார்பில் கூட்டணி கட்சியான அ.ம.மு.க கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் போட்டியிட்டார். கடந்த ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் தேனி தொகுதியில், 69.84 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. இதனிடையே தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தங்க தமிழ் தமிழ் செல்வன் 23820 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட டிடிவி தினகரன் 13525 பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்த தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் 13576 வாக்குகள் பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.