வாக்காளர்களே எஜமானர்கள் : அவர்களுக்கு எல்லாமே தெரியும் : துரை வைகோ பெருமிதம்

தொண்டர்களுக்காகவே தேர்தலில் நின்றேன். நான் முன்னிலையில் இருப்பது அவர்களுக்கும், கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொண்டர்களுக்காகவே தேர்தலில் நின்றேன். நான் முன்னிலையில் இருப்பது அவர்களுக்கும், கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
MDMK Durai Vaiko

துரை வைகோ

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்திற்கு வருகை தந்த திருச்சி நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தற்போது வரை முன்னிலையில் இருப்பது மக்கள் என் மீதும், ஸ்டாலின் தலைமையிலான அரசின் மீதும் வைத்துள்ள நம்பிக்கையாகவே பார்க்கின்றேன்.

Advertisment

தேர்தலைப் பொறுத்தவரை வாக்காளர்களே எஜமானர்கள், யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்கின்றனர். என் தந்தையிடம் தற்போது வரை பேசவில்லை, தேர்தலில் நிற்பதற்கு தனிப்பட்ட விருப்பம் எனக்கு இல்லை, எனினும் தொண்டர்களுக்காகவே தேர்தலில் நின்றேன். நான் முன்னிலையில் இருப்பது அவர்களுக்கும், கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெற்றி பெற்று திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு தேவையானவற்றை செய்து தருவேன் எனக் கூறினார். மதிமுக வேட்பாளர் துரை வைகோ செய்தியாளர்கள் சந்திப்பின்போது அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

க. சண்முக வடிவேல்

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Durai Vaiko

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: