மயிலாடுதுறை மக்களவை தொகுதி தேர்தல் முடிவுகள் – 2024
மயிலாடுதுறை, தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் 28வது தொகுதி ஆகும்.மயிலாடுதுறை மாவட்டத்துக்குபட்ட மயிலாடுதுறை, சீர்காழி (தனி), பூம்புகார் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளையும், தஞ்சாவூர் மாவட்டத்துக்குபட்ட திருவிடைமருதூர் (தனி), கும்பகோணம், பாபநாசம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளையும் உள்ளடக்கியது இத்தொகுதி.
தலைக்காவிரியில் புறப்பட்டு தமிழகம் முழுவதும் செழிக்க வைக்கும் காவிரி ஆறு, கடலில் சங்கமிக்கும் பகுதி இது. காவிரி பாசன விவசாய பகுதியான இந்த தொகுதி முழுக்க முழுக்க விவசாயத்தை மையமாக கொண்டு இயங்குகிறது. காவிரியில் நீர்வரத்து இல்லாத காலங்களில் நிலத்தடி நீரை நம்பி விவசாயம் நடைபெற்று வருகிறது. காவிரி ஆறு பல பகுதிகளில் பாய்ந்து வடக்கு கடைமடைப்பகுதியை கொண்டது இந்த தொகுதி. இதனால் காவிரிக்கான போராட்டம் தீவிரமாக இருக்கும் இடம்.
இங்கு வன்னியர்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். வெற்றியைத் தீர்மானிப்பதில் அவர்கள் பங்கு அதிகம். பட்டியலினத்தவரும் மீனவச் சமூகத்தவர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.
2024ம் தேர்தலில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தி.மு.க சார்பாக சுதா (காங்கிரஸ் ) அ.தி.மு.க சார்பாக பாபு, பா.ஜ.க சார்பாக ம.க.ஸ்டாலின், நாம் தமிழகர் கட்சி சார்பாக பி.காளியம்மாள் போட்டியிடுகின்றனர்.
ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை உடனுக்குடன் இந்தச் செய்தி தொகுப்பில் காணலாம். (அப்டேட்டுக்கு இணைந்திருங்கள்).
1962 (தனி) மரகதம் சந்திரசேகர்- காங்கிரசு
1967 (தனி) சுப்ரவேலு தி.மு.க
1971 (தனி) சுப்ரவேலு தி.மு.க
1977 - குடந்தை ராமலிங்கம் - காங்கிரசு
1980 - குடந்தை ராமலிங்கம் - காங்கிரசு
1984 - இ. எசு. எம். பக்கீர்முகம்மது - காங்கிரசு
1989 - இ. எசு. எம். பக்கீர்முகம்மது - காங்கிரசு
1991 - மணிசங்கர் அய்யர் - காங்கிரசு
1996 - பி.வி. இராஜேந்திரன் - தமிழ் மாநில காங்கிரசு
1998 - கிருஷ்ணமூர்த்தி - தமிழ் மாநில காங்கிரசு
1999 - மணிசங்கர் அய்யர் - காங்கிரசு
2004 - மணிசங்கர் அய்யர் - காங்கிரசு
2009 - ஓ. எஸ். மணியன் - அதிமுக
2014 - ஆர். கே. பாரதி மோகன் - அதிமுக
2019 - இராமலிங்கம் - திமுக
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.