Advertisment

Nagapattinam Lok Sabha Election Results 2024: நாகையில் சி.பி.ஐ வெற்றி; 4,07,106 வாக்குகள் பெற்றார் வை.செல்வராஜ்

மக்களவை தேர்தல் 2024; நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நிலவரம் இங்கே.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa

நாகப்பட்டினம் தொகுதி வாக்கு எண்ணிக்கை நிலவரம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நாகப்பட்டினம் மக்களவை தொகுதி தேர்தல் முடிவுகள் – 2024

Advertisment

நாகையில் வை.செல்வராஜ் வெற்றியை பெற்றார். நாகை தொகுதியில் சி.பி.ஐ வேட்பாளர் வை.செல்வராஜ் 4,07,106 வாக்குகள் பெற்று வெற்றியை உறுதி செய்தார். 

 நாகப்பட்டினம் மக்களவை தொகுதி 39 மக்களவை தொகுதிகள் கொண்ட தமிழ்நாட்டில், 29-வது தொகுதி ஆகும். நாகப்பட்டினம் நாடாமன்ற தனித் தொகுதி நன்னிலம், திருவாரூர், திருத்துறைபூண்டு ( தனி), நாகப்பட்டினம்,வேதாரண்யம், கீழ்வேளூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. கடந்த 1957 முதல் 2019ம் ஆண்டு வரை இத்தொகுதியில் நடைபெற்றுள்ள 17 நாடாளுமன்றத் தேர்தளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 7 முறையும், தி.மு.க. காங்கிரஸ் தலா 4 முறையும், அ.தி.மு.க 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

 2024 தேர்தலில் சி.பி.ஐ சார்பாக விசெல்வராஜ், அ.தி.மு.க சார்பாக ஜி.சுர்ஜித் சங்கர், பா.ஜ.க சார்பாக எஸ்.ஜி.எம்.ரமேஷ், நாம் தமிழர் கட்சி சார்பாக முகார்த்திகா போட்டியிடுகிறார். கடந்த ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற்ற மக்களவை தேர்தலில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் 71.94 % வாக்குகள் பதிவாகி உள்ளது.

ஆண் வாக்காளர்கள் 6,54,850, பெண் வேட்பாளர்கள் 6,83,528, மூன்றாம் பாலினத்தவர் 81 பேர் என் மொத்தம் 13,38,459 வாக்காளர்கள் உள்ளனர்.  

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. நாகப்பட்டினம் (தனி) தொகுதியில், சி.பி.ஐ வேட்பாளர் செல்வராஜ் 19,565 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

 கடந்த கால தேர்தல் முடிவுகள்

2019 நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: மு.செல்வராசு (சி.பி.ஐ) - 522,892 வாக்குகள், மு. சரவணன் (அ.தி.மு.க) - 3,11,539 வாக்குகள், P. மாலதி (நா.த.க) - 51,448 வாக்குகள், K. குருவையா (ம.என்.எம்.) - 14,503 வாக்குகள், வி.அனிதா (பி.எஸ்.பி.) - 5,412 வாக்குகள்.

 2014 நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: டாக்டர் கே.கோபால் (அ.தி.மு.க) - 434,174 வாக்குகள், ஏ. கே. எஸ். விஜயன் (தி.மு.க) - 3,28,095 வாக்குகள், ஜி.பழனிச்சாமி (சி.பி.ஐ) - 90,313 வாக்குகள், வடிவேல் ராவணன் (பா.ம.க) - 43,506 வாக்குகள், தலை டி. ஏ. பி. செந்தில்பாண்டியன் (காங்கிரஸ்) - 23,967 வாக்குகள்.

 2009 நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: ஏ. கே. எஸ். விஜயன் (தி.மு.க) - 369,915 வாக்குகள், மு.செல்வராசு (சி.பி.ஐ) - 3,21,953 வாக்குகள், மு. முத்துக்குமார் (தே.மு.தி.க) - 51,376 வாக்குகள், ஜி.வீரமுத்து (பி.எஸ்.பி.) - 5,123 வாக்குகள்.

 2004 நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: ஏ. கே. எஸ். விஜயன் (தி.மு.க) - 463,389 வாக்குகள், பி. ஜே. அர்ச்சுனன் (அ.தி.மு.க) - 2,47,166 வாக்குகள், எஸ். ஜி. எம். ரமேஷ் (ஜே.டி(யு)) - 17,090 வாக்குகள், அ. பாலகுரு (பி.எஸ்.பி.) - 4,207 வாக்குகள்.

 1999 நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: ஏ. கே. எஸ். விஜயன் (தி.மு.க) - 342,237 வாக்குகள், மு.செல்வராசு (சி.பி.ஐ) - 3,19,771 வாக்குகள், த. நடையழகன் (பி.டி.) - 22,346 வாக்குகள்.

 1998 நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: மு.செல்வராசு (சி.பி.ஐ) - 375,589 வாக்குகள், டாக்டர் கே.கோபால் (அ.தி.மு.க) - 2,44,286 வாக்குகள், எம்.தியாகராஜன் (காங்கிரஸ்) - 15,837 வாக்குகள், ஜி.ஜீவானந்தம் (பி.டி.) - 3,354 வாக்குகள்.

 1996 நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: மு.செல்வராசு (சி.பி.ஐ) - 394,330 வாக்குகள், எம். கன்னிவண்ணன் (காங்கிரஸ்) - 1,72,984 வாக்குகள், வி.தம்புசாமி (சி.பி.ஐ(எம்)) - 1,08,069 வாக்குகள், ச. ராஜாமணி (பா.ஜ.க) - 16,582 வாக்குகள்.

 1991 நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: பத்மா (காங்கிரஸ்) - 327,413 வாக்குகள், மு.செல்வராசு (சி.பி.ஐ) - 3,01,697 வாக்குகள், உ. காசிநாதன் (பா.ம.க.) - 28,098 வாக்குகள்.

 1989 நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: மு.செல்வராசு (சி.பி.ஐ) - 341,921 வாக்குகள், என். எஸ். வீரமுரசு (காங்கிரஸ்) - 3,20,398 வாக்குகள், வி. எஸ். தகராஜு (பா.ம.க.) - 25,516 வாக்குகள்.

 1984 நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: ம. மகாலிங்கம் (அ.தி.மு.க) - 300,912 வாக்குகள், க. முருகையன் (சி.பி.ஐ) - 2,98,623 வாக்குகள்.

 1980 நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: தமிழா கருணாநிதி (தி.மு.க) - 278,561 வாக்குகள், க. முருகையன் (சி.பி.ஐ) - 2,67,887 வாக்குகள்.

 1979 நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: க. முருகையன் (சி.பி.ஐ) - 288,000 வாக்குகள், ம. மகாலிங்கம் (அ.தி.மு.க) - 2,72,059 வாக்குகள்.

 1977 நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: எஸ். ஜி. முருகையன் (சி.பி.ஐ) - 278,419 வாக்குகள், தமிழா கருணாநிதி (தி.மு.க) - 2,37,609 வாக்குகள்.

 1971 நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: மு.காத்தமுத்து (சி.பி.ஐ) - 219,684 வாக்குகள், வி. சாம்பசிவம் (ஐ.என்.சி(ஓ)) - 1,31,957 வாக்குகள், ஜி.பாரதிமோகன் (சிபிஐ(எம்)) - 48,171 வாக்குகள்.

 1967 நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்:  வி. சாம்பசிவம் (காங்கிரஸ்) - 164,167 வாக்குகள், வி. பி. சிந்தன் (சிபிஐ(எம்)) - 1,52,948 வாக்குகள், மு.காத்தமுத்து (சி.பி.ஐ) - 75,812 வாக்குகள்.

 1962 நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்:  கோபால்சாமி தென்கொண்டார் (காங்கிரஸ்) - 161,421 வாக்குகள், சி. கந்தசாமி தேவர் (சிபிஐ) - 1,29,004 வாக்குகள், ஏ. எம். மைதீன் சாயபு (ஐ.யூ.எம்.டு) - 56,412 வாக்குகள்.

 1957 நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்:  கே. ஆர். சம்பந்தம் (காங்கிரஸ்) - 252,275 வாக்குகள், எம்.அய்யக்கண்ணு (காங்கிரஸ்) - 216,890 வாக்குகள், ஏ. கே. சுப்பையா (சி.பி.ஐ) - 1,51,704 வாக்குகள், ப. ராமமூர்த்தி (சி.பி.ஐ) - 1,24,205 வாக்குகள்.

Lok Sabha Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment