/indian-express-tamil/media/media_files/WwN0ud1kjprZ1V8H057B.jpg)
தூத்துக்குடி தொகுதி வாக்கு எண்ணிக்கை நிலவரம்
தூத்துக்குடி மக்களவை தொகுதி தேர்தல் முடிவுகள் – 2024
2024ம் ஆண்டு தூத்துக்குடி மக்களவை தொகுதியில் தி.மு.க சார்பாக கனிமொழியும், அ.தி.மு.க சார்பாக சிவசாமி வேலுமணியும், பா.ஜ.க சார்பாக ஸ்.டி.ஆர்.விஜயசீலன் ( த.மா.கா), நாம் தமிழர் கட்சி சார்பாக ரொவினா ரூத் ஜேன் போட்டியிடுகிறார். தூத்துக்குடியில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் 66.88 % வாக்குபதிவாகி உள்ளது. மூன்று மக்களவைத் தேர்தலில் 2 முறை தி.மு.கவும், ஒரு முறை அ.தி.மு.கவும் வெற்றி பெற்றுள்ளது.
இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில், தி.மு.க சார்பாக போட்டியிட்ட கனிமொழி – 4,26, 617 (54.38%) வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். அ.தி.மு.க வேட்பாளர் சிவசாமி வேலுமணி 1,23,214 ( 15.71%) பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ரவினா ரூத் ஜெயின் 1,01,065 ( 12.88%) வாக்குகள் பெற்றுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட விஜயசீலன் எஸ்.டி.ஆர் 9,38,69 ( 11.96%) பெற்றுள்ளார்.
கடந்த கால தேர்தல் முடிவுகள்
2019 தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்:கனிமொழி (தி.மு.க) 5,63,143 வாக்குகள், தமிழிசை சௌந்தரராஜன் (பா.ஜ.க) 2,15,934 வாக்குகள்.
2014 தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: ஜெயசிங் தியாகராஜ் நாட்டர்ஜி (அ.தி.மு.க) 3,66,052 வாக்குகள், பி. ஜெகன் (தி.மு.க) 2,42,050 வாக்குகள்.
2009 தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: எஸ். ஆர். ஜெயதுரை (தி.மு.க) 3,11,017 வாக்குகள், சிந்தியா பாண்டியன் (அ.தி.மு.க) 2,34,368 வாக்குகள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.