திருநெல்வேலி மக்களவை தொகுதி தேர்தல் முடிவுகள் – 2024
நெல்லையில் ராபர்ட் ப்ரூஸ் வெற்றி
நெல்லை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் வெற்றி பெற்றார். மொத்தமாக 5.02 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
தமிழ்நாட்டின் 39 மக்களவை தொகுதிகளுள், திருநெல்வேலி 38வது தொகுதி ஆகும். இதில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், ஆலங்குளம், நாங்குநேரி, ராதாபுரம் உள்ளிட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது. இங்கே 8,02,293 ஆண் வாக்காளர்களும், 8,39,863 பெண் வாக்காளர்களும், முன்றாம் பாலின வாக்காளர்கள் 149 பேர் என்று மொத்தம் 16,42,305 வாக்காளர்கள் உள்ளனர்.
கடந்த ஏப்ரல் 19-ந் தேதி நடைபெற்ற மக்களவை தேர்தலில் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் 64.10 % வாக்குகள் பதிவாகி உள்ளது.
இந்த தொகுதியில் நடைபெற்ற முதல் 3 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதன் பின்னர் சுதந்திராகட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என தேசிய கட்சிகளின் வசமிருந்த தொகுதி 1977ல் நடைபெற்ற தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க – தி.மு.க என்று மாநில கட்சிகளிடம் சென்றது. இதுவரை மொத்தமாக 17 தேர்தல்களை இத்தொகுதி சந்தித்துள்ளது. அதில் 7 முறை அ.தி.மு.க, 5 முறை காங்கிரஸ், தி.மு.க 3 முறை, கம்யூனிஸ்ட் மற்றும் சுதந்திரா கட்சி தலா 1 முறை வெற்றியடைந்துள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் தி.மு.க சார்பாக சி.ராபர்ட் ப்ரூஸ் ( காங்கிரஸ்), அ.தி.மு.க சார்பாக ஜான்சி ராணி, பா.ஜ.க சார்பாக நயினார் நாகேந்திரன் . நாம் தமிழர் கட்சி சார்பாக பா.சத்யா போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மக்களவை தொகுதியில் நடந்து முடிந்த 12-வது சுற்று வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் – 2,71,251 பெற்று முன்னிலையில் உள்ளது. பா.ஜ.க – 1,89,921 வாக்குகள், அ.தி.மு.க – 4,91,09 நா.த.க – 52,205 வாக்குகள் பெற்றுள்ளன.
2019 திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: ச. ஞானதிரவியம் (தி.மு.க) - 522,993 வாக்குகள், பி. எச். மனோஜ் பாண்டியன் (அ.தி.மு.க) - 3,37,273 வாக்குகள், பி. சத்யா (நா.த.க) - 49,935 வாக்குகள், மு. வெண்ணிமலை (ம.என்.எம்.) - 23,120 வாக்குகள்.
எஸ். எஸ். ராமசுப்பு (காங்கிரஸ்) - 274,932 வாக்குகள், க. அண்ணாமலை (அ.தி.மு.க) - 2,53,629 வாக்குகள், ச. மைக்கேல் ராயப்பன் (தே.மு.தி.க) - 94,562 வாக்குகள், கரு. நாகராஜன் (பா.ஜ.க) - 39,997 வாக்குகள்.
ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் (காங்கிரஸ்) - 370,127 வாக்குகள், ஆர். அமிர்தா கணேசன் (அ.தி.மு.க) - 2,03,052 வாக்குகள், மு. அப்பாவு (ஜே.டி.(யு)) - 39,333 வாக்குகள், த. காசிபாண்டியன் (பி.எஸ்.பி.) - 3,606 வாக்குகள்.
பி. எச். பாண்டியன் (அ.தி.மு.க) - 249,975 வாக்குகள், ஆர். அமிர்தா கணேசன் (தி.மு.க) - 2,23,481 வாக்குகள், பி. வி. பக்தவத்சலம் (பி.டி.) - 1,12,941 வாக்குகள், மு. சேது ராம பாண்டியன் (எ.ஐ.எஃப்.பி.) - 3,913 வாக்குகள்.
கடம்பூர் ஆர். ஜனார்த்தனன் (அ.தி.மு.க) - 247,823 வாக்குகள், சரத்குமார் (தி.மு.க) - 2,40,919 வாக்குகள், டாக்டர் அ. சேவியர் செல்வா சுரேஷ் (பி.டி.) - 86,419 வாக்குகள், ஜீ. ஆர். எட்மண்ட் (ம.தி.மு.க) - 16,789 வாக்குகள்.
1996 திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்:
டி. எஸ். ஏ. சிவப்பிரகாசம் (தி.மு.க) - 295,001 வாக்குகள், ஏ. ஆர். ராஜசெல்வம் (அ.தி.மு.க) - 1,76,721 வாக்குகள், குட்டி என்கிற சண்முக சிதம்பரம் (ம.தி.மு.க) - 77,648 வாக்குகள், க. கிருஷ்ணசாமி (ஜே.பி) - 61,567 வாக்குகள், ஏ. ஆர். பொன்னையா (பா.ஜ.க) - 25,545 வாக்குகள்.
கடம்பூர் ஆர். ஜனார்த்தனன் (அ.தி.மு.க) - 351,048 வாக்குகள், கே. பி. கந்தசாமி (தி.மு.க) - 1,97,456 வாக்குகள், எஸ்.கிருஷ்ணகாந்தன் யாதவ் (பா.ம.க.) - 10,055 வாக்குகள், எம். பி. ஜெபராஜ் (ஜே.பி) - 2,619 வாக்குகள்.
கடம்பூர் ஆர். ஜனார்த்தனன் (அ.தி.மு.க) - 394,444 வாக்குகள், டி. எஸ். ஏ. சிவப்பிரகாசம் (தி.மு.க) - 2,03,309 வாக்குகள்.
கடம்பூர் ஆர். ஜனார்த்தனன் (அ.தி.மு.க) - 296,897 வாக்குகள், டி. எஸ். ஏ. சிவப்பிரகாசம் (தி.மு.க) - 2,10,951 வாக்குகள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.