Advertisment

Vellore Lok Sabha Election Results 2024: வேலூர் தொகுதி : தி.மு.க முன்னிலை

மக்களவை தேர்தல் 2024; வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நிலவரம் இங்கே.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

 

Advertisment

 

 

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் முடிவுகள் – 2024

தமிகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 8வது தொகுதி வேலூர் மக்களவைத் தொகுதி ஆகும். இதில் வேலூர், வாணியம்பாடி, ஆம்பூர், அணைக்கட்டு,  கே.வி. குப்பம் ( தனி), குடியாத்தம் ( தனி) உள்ளிட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது. இந்த தொகுதியில் ஆண் வாக்காளர்கள்- 7,31,831, பெண் வாக்காளர்கள்- 7,77,922, மூன்றாம் பாலின வாக்காளர்கள்-211 என மொத்தம் 15,09,964 வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில், வேலூரில், 73.53 % வாக்குகள் பதிவாகி உள்ளது. 2024ம் தேர்தலில் இங்கே தி.மு.க சார்பாக டி.எம்.கதிர் ஆனந்த், அ.தி.மு.க சார்பாக டாக்டர் பசுபதி, பா.ஜ.க சார்பாக ஏ.சி.சண்முகம் ( புதிய நீதிக் கட்சி ), நாம் தமிழர் கட்சியின் சார்பாக தி.மகேஷ் ஆனந்த் உள்ளிட்ட வேட்பாளர்கள்  போட்டியிடுகின்றனர்.

இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார்.  

 கடந்த கால தேர்தல் முடிவுகள்

2019 வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: கதிர் ஆனந்த் (தி.மு.க) 4,85,340 வாக்குகள், ஏ. சி. சண்முகம் (அ.தி.மு.க) 4,77,199 வாக்குகள், தீபலட்சுமி (நா.த.க) 26,995 வாக்குகள்.

2014 வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: பி. செங்குட்டுவன் (அ.தி.மு.க) - 3,83,719 வாக்குகள், ஏ. சி. சண்முகம் (புதிய நீதிக் கட்சி) - 3,24,326 வாக்குகள், அப்துல் ரகுமான் (ஐயூஎம்டு) - 2,05,896 வாக்குகள், ஜெ.விஜய் இளஞ்செசியன் (காங்கிரஸ்) - 21,650 வாக்குகள்.

2009 வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: எம். அப்துல் ரஹ்மான் (தி.மு.க) - 3,60,474 வாக்குகள், வாசு (அ.தி.மு.க) - 2,53,081 வாக்குகள், சௌகத் ஷெரீப் (தே.மு.தி.க) - 62,696 வாக்குகள், ஏ. கே. ராஜேந்திரன் (பா.ஜ.க) 11,184 வாக்குகள்.

2004 வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: கே. எம். காதர் மொகிதீன் (தி.மு.க) - 4,36,642 வாக்குகள்,  சந்தானம் (அ.தி.மு.க) - 2,58,032 வாக்குகள், ஏ. எம். எஸ். பரமசிவம் (ஜே.பி) - 11,309 வாக்குகள்.

1999 வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: என். டி. சண்முகம் (பா.ம.க.) - 324,547 வாக்குகள், முகம்மது ஆசிப் (அ.தி.மு.க) - 2,98,862 வாக்குகள், சி. கே. தமிழரசன் த.மா.கா(எம்) - 44,551 வாக்குகள்.

 1998 வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: என். டி. சண்முகம் (பா.ம.க.) - 331,035 வாக்குகள், டி. ஏ. முஹம்மது சகி (தி.மு.க) - 3,04,630 வாக்குகள், பி. அக்பர் பாஷா (காங்கிரஸ்) - 18,885 வாக்குகள்.

1991 வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: பி. அக்பர் பாஷா (காங்கிரஸ்) - 383,177 வாக்குகள், ப. சண்முகம் (தி.மு.க) - 1,84,008 வாக்குகள், முகம்மது இஷாக் (ஐயூஎம்டு) - 31,387 வாக்குகள், ஏ. கே. சுந்தரராஜன் (ஜே.பி) - 6,354 வாக்குகள், M. தனசேகரன் (அம்பேத்கர் மக்கள் இயக்கம்) - 3,321 வாக்குகள்.

1989 வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: ஏ. கே. ஏ. அப்துல் சமது (காங்கிரஸ்) - 356,637 வாக்குகள், எம்.அப்துல் லத்தீப் (தி.மு.க) - 1,95,787 வாக்குகள், ஆர்.மோகன் (பா.ம.க.) - 85,312 வாக்குகள்.

1984 வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: ஏ. சி. சண்முகம் (அ.தி.மு.க) - 284,416 வாக்குகள், அ. மு. இராமலிங்கம் (தி.மு.க) - 2,09,693 வாக்குகள்.

1980 வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: ஏ. கே. ஏ. அப்துல் சமது (சுயேச்சை) - 232,567 வாக்குகள், எம்.அப்துல் லத்தீப் (தி.மு.க) - 1,53,021 வாக்குகள், எம். ஜே. தமிழ்மணி (ஜேபி (எஸ்)) - 16,007 வாக்குகள்.

1977 வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: வி. தண்டாயுதபாணி (ஐ.என்.சி(ஓ)) - 220,994 வாக்குகள், எம்.அப்துல் லத்தீப் (சுயேச்சை) - 2,17,833 வாக்குகள்.

1971 வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: ஆர். பி. உலகநம்பி (தி.மு.க) - 221,512 வாக்குகள், த. மணவாளன் (ஐ.என்.சி(ஓ)) - 1,36,191 வாக்குகள்.

1967 வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: குசேலர் (தி.மு.க) - 203,887 வாக்குகள், த. மணவாளன் (காங்கிரஸ்) - 1,34,155 வாக்குகள், மு.கிருஷ்ணசாமி ஆர்.பி.ஐ(ஏ) - 27,143 வாக்குகள்.

1962 வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: அப்துல் வாகித் (காங்கிரஸ்) - 114,872 வாக்குகள், என்.சிவராஜ் (ஆர்.பி.ஐ) - 90,906 வாக்குகள், ராஜரத்தினம் (சி.பி.ஐ) - 47,186 வாக்குகள், கணேச முதலியார் (பி.எஸ்.பி.) - 5,110 வாக்குகள்.

1957 வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: என். ஆர். முனிசாமி (காங்கிரஸ்) - 144,377 வாக்குகள், முத்துகிருஷ்ணன் (காங்கிரஸ்) - 126,132 வாக்குகள்.

1951 வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள்: முத்துகிருஷ்ணன் (காங்கிரஸ்) - 139,448 வாக்குகள், ராமச்சந்தர் (காமன்வீல் கட்சி) - 118,154 வாக்குகள், என். எஸ். வர்தாச்சாரி (காங்கிரஸ்) - 1,17,474 வாக்குகள், கிருஷ்ணசாமி (ஆர்.பி.ஐ) - 96,045 வாக்குகள், மூர்த்தி (கே.எம்.பி.பி) - 50,085 வாக்குகள், அம்பி ஐயர் (கே.எம்.பி.பி) - 29,201 வாக்குகள்.

Lok Sabha Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment