Chennai News Highlights: தி.மு.கவின் ஊழல்தான் தமிழ்நாட்டில் பா.ஜ.கவை வளர்க்கிறது - ஆதவ் அர்ஜூனா

Tamil Nadu News Update Today 21 July 2025 இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil Nadu News Update Today 21 July 2025 இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Aadhav Arjuna life in threat complaint to Chennai T Nagar police Tamil News

Today Latest News Update: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Jul 21, 2025 21:46 IST

    குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா

    குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியில் இருந்து விலகுவதாக குடியரசுத் தலைவருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார்.



  • Jul 21, 2025 21:31 IST

    ஸ்டாலின் 3 நாட்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல் - அப்போலோ மருத்துவமனை அறிக்கை

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் 3 நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அளித்த பரிந்துரைப்படி சில பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. மருத்துவமனையில் இருந்து தனது பணியைத் தொடர்ந்து மேற்கொள்வார் என அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.



  • Advertisment
  • Jul 21, 2025 21:20 IST

    ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் மோடி 

    மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.



  • Jul 21, 2025 21:19 IST

    பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர்: நாடாளுமன்றத்தில் 25 மணி நேரம் விவாதம் நடத்த முடிவு

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் 25 மணி நேரம் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சியினர் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் 16 மணி நேரம் மாநிலங்களவையில் 9 மணி நேரம் என மொத்தம் 25 மணி நேரம் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அடுத்த வாரம் விவாதம் நடைபெறலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Advertisment
    Advertisements
  • Jul 21, 2025 20:55 IST

    ‘ஸ்டாலின் நலமுடன் உள்ளார்... 2 நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்’ - உதயநிதி ஸ்டாலின் தகவல்

    சென்னையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி: “"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார்; அடுத்த 2 நாட்களுக்கு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.



  • Jul 21, 2025 20:06 IST

    எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க-விடம் ஏமாந்து போய்விட்டார்; அன்வர் ராஜா விழித்துக் கொண்டார் - செல்வப்பெருந்தகை

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை விமான நிலையத்தில் பேட்டி: “எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க-விடம் ஏமாந்து போய்விட்டார்; அன்வர் ராஜா விழித்துக் கொண்டார்; அவர் தி.மு.க-வில் இணைந்தது நல்ல முடிவுதான்” என்று தெரிவித்துள்ளார்.



  • Jul 21, 2025 19:28 IST

    திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை குற்றவாளி; தகவல் தெரிவித்தால் ரூ.5 லட்சம் சன்மானம்

    திருவள்ளூரில் சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. குற்றவாளி குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.

    பாலியல் குற்றவாளி குறித்து தகவல் தெரிந்தவர்கள் 9952060948 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளும்படி காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.



  • Jul 21, 2025 18:42 IST

    ஸ்டாலின் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் - இ.பி.எஸ்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரண குணமடைய பிரார்த்தனை செய்வதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "முதலமைச்சர் .ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்தி வந்துள்ளது. அவர் பூரண குணமடைய வேண்டும் என என் சார்பாகவும், மக்கள் சார்பாகவும் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்தார்.



  • Jul 21, 2025 18:22 IST

    மு.க.ஸ்டாலினிடம் கமல்ஹாசன் நலம் விசாரிப்பு

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். தொலைபேசி மூலம் பேசிய ரஜினிகாந்த், முதலமைச்சர் விரைவில் நலமுடன் வீடு திரும்ப விரும்புவதாக தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தை தொடர்ந்து நடிகரும் மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதலமைச்சரை நலம் விசாரித்தார். 



  • Jul 21, 2025 18:14 IST

    இரவு நேரப் பணி - போலீசாருக்கு பல்வேறு உத்தரவுகள்

    சென்னையில் இரவு நேரப் பணியில் ஈடுபடும் போலீசாருக்கு பல்வேறு உத்தரவுகளை மாநகரக் காவல்துறை பிறப்பித்துள்ளது. இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படாத வகையில் வாகனத் தணிக்கை நடக்க வேண்டும். ரோந்து வாகன போலீசார், போஸ்டர் ஒட்டுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டப்படும் போஸ்டர்களுக்கு அந்தப் பகுதி இரவு நேர போலீசார்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். அண்ணா சாலை, கடற்கரை காமராஜர் சாலை உள்ளிட்ட எந்த சாலைகளிலும் பைக் ரேஸ் நடக்கக் கூடாது. பைக் ரேஸில் ஈடுபட்டு தப்பிப்போரை, அடுத்த செக்பாயிண்டில் தகவல் தெரிவித்து பிடித்து வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.



  • Jul 21, 2025 17:58 IST

    அச்சுதானந்தன் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

    கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ‘வி.எஸ். அச்சுதானந்தன் இழப்பால் துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும், கேரள மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.



  • Jul 21, 2025 17:25 IST

    "தமிழகத்தில் 24 மணி நேரத்தில் மட்டும் 10 படுகொலைகள்"

    தமிழகத்தில் 24 மணி நேரத்தில் மட்டும் 10 படுகொலைகள் நடந்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளன. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆசிரியர் குத்திக் கொலை, நகைக்காக மூதாட்டி ஒருவர் கழுத்தை நெரித்துக் கொலை, மதுபோதையில் இளைஞர் ஒருவர் கொடூரக் கொலை என நீளும் இந்தப் பட்டியலில் கொலையுண்டவர்களில் பாதி பேர் பெண்கள் என்பதும், மீதி கொலைகளின் பிண்ணனியில் போதை இருப்பதும் அறிவாலயத்தின் அலங்கோல ஆட்சிக்கான அவலச் சான்றுகள், அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தை இன்று ஆயுதங்களின் கிடங்காகவும் கொலைகளின் கூடாரமாகவும் மாற்றிய தி.மு.க.வை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்றினால் மட்டுமே இங்கு அறம் மலரும், சமூக நல்லிணக்கம் சாத்தியமாகும் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.

     



  • Jul 21, 2025 17:19 IST

    மெரினா கடற்கரையை சுத்தமாக வைக்க வேண்டுகோள்

    மெரினா கடற்கரையை சுத்தமாக வைத்திருக்கும் பணியில் இன்று முதல் 100 தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை 2.4 கிமீ தூரத்திற்கு, காலை 6 மணி முதல் 2 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை தூய்மை பணியில் ஈடுபடவுள்ளனர். காலை 70 பணியாளர்களும், மாலை 30 பணியாளர்களும் தொடர்ந்து பணியில் இருப்பார்கள். மேலும் கடற்கரை மணல் பரப்பை தூய்மை படுத்தும் டிராக்டர்களும் தொடர்ந்து தூய்மை பணியில் ஈடுபடும். மெரினா கடற்கரை தூய்மை பணியை சென்னை மாநகராட்சி தனியாருக்கு ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மெரினா கடற்கரையை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.



  • Jul 21, 2025 17:17 IST

    பள்ளிக் கட்டடங்கள் மீது அலட்சியமா? - அண்ணாமலை

    தமிழகத்தில் அனைத்து பள்ளிக் கட்டடங்களையும் தர உறுதிப் பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது பற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

     



  • Jul 21, 2025 17:12 IST

    நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு

    நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை காலை 11.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் மக்களவை, மாநிலங்களவை நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது. பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.



  • Jul 21, 2025 17:11 IST

    கல்லூரி மீது போர் விமானம் விழுந்ததில் 19 பேர் பலி

    வங்கதேசத்தில் கல்லூரி மீது போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் 19 பேர் உயிரிழந்தனர். போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். போர் விமானம் பயிற்சிக்குச் சென்றபோது தீப்பிடித்து கல்லூரி மீது விழுந்தது. டாக்காவின் வடக்கு உத்தரா பகுதியில் உள்ள கல்வி நிலையம் மீது போர் விமானம் விழுந்து நொறுங்கியது.



  • Jul 21, 2025 16:42 IST

    ஸ்டாலினிடம் நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரிப்பு

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.  தொலைபேசி மூலம் பேசிய ரஜினிகாந்த், முதலமைச்சர் விரைவில் நலமுடன் வீடு திரும்ப விரும்புவதாக தெரிவித்துள்ளார்



  • Jul 21, 2025 16:30 IST

    கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்

    கேரள முன்னாள் முதல்வரும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான அச்சுதானந்தன் (வயது 101) வயது மூப்பு காரணமாக காலமானார். ஏற்கெனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு கடந்த ஜூன் 23 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி பிற்பகல் 3.20 மணிக்கு அச்சுதானந்தன் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jul 21, 2025 16:13 IST

    உயர் நீதிமன்றத்தின் 36வது தலைமை நீதிபதி பதவியேற்பு

    சென்னை உயர் நீதிமன்றத்தின் 36வது தலைமை நீதிபதியாக எம்.எம். ஸ்ரீவஸ்தாவா பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் ரவி பதவிப் பிரமானம் செய்து வைத்தார்.



  • Jul 21, 2025 16:09 IST

    ' அவரும் நானும்' நூலின் இரண்டாம் பாகம் வெளியீட்டு விழா

    திட்டமிட்டபடி திருமதி துர்கா ஸ்டாலின் ' அவரும் நானும்' நூலின் இரண்டாம் பாகம் வெளியீட்டு விழா மாலை 5 மணிக்கு கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    <iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fmanushya.puthiran%2Fposts%2Fpfbid0tegqJPeA9EFVbDvYfT8qvnFVmyparWYvmZ5DzNkdyDxXgBLsHrvBnJJrtYME4vJBl&show_text=true&width=500" width="500" height="672" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>



  • Jul 21, 2025 16:06 IST

    ஸ்டாலின் கலந்துக்கொள்ள இருந்த பல்வேறு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு

    திருப்பூரில் நாளை, நாளை மறுநாள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டிருந்த நிலையில் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டது.



  • Jul 21, 2025 15:41 IST

    மு.க.ஸ்டாலின் தனது உடல்நலத்தின் மீது அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் -செல்வப்பெருந்தகை



  • Jul 21, 2025 15:40 IST

    அதிமுக உட்கட்சி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

    அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்த விசாரணைக்கு காலவரம்பு நிர்ணயிக்கக் கோரி ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இயற்கை நீதியின் அடிப்படையில் மனுதாரர்களுக்கு போதுமான அவகாசம் வழங்கப்படும். ஆரம்பகட்ட விசாரணை முடிக்கப்பட்ட பின்பு இந்த பிரச்சினை குறித்து உரிய முடிவெடுக்கப்படும். விசாரணையை நடத்தி முடிக்க காலக்கெடு  நிர்ணயிக்க தேவை இல்லை.

    - சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்



  • Jul 21, 2025 15:37 IST

    ம.நீ.ம பெண் நிர்வாகி, ஆட்டோ ஓட்டுநர் இடையே மோதல்

    ம.நீ.ம மாநில நிர்வாகி சினேகா மோகன் தாஸ் மீது ஆட்டோ ஓட்டுநர் தாக்குதல் நடத்தியதாக புகாரில் மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Jul 21, 2025 15:20 IST

    அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விரைவில் முடிவு

    அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். தேர்தல் ஆணையத்தின் பதில் மனுவை அடுத்து வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது



  • Jul 21, 2025 14:39 IST

    முதல்வர் நன்றாக இருக்கிறார்: துரைமுருகன்

    காலை நடைப்பயிற்சியின்போது முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான தலைசுற்றல் இருந்தது. தற்போது அவர் நன்றாக இருக்கிறார், விரைவில் வீடு திரும்புவார் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.



  • Jul 21, 2025 14:38 IST

    சீமான் உடன் பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை: நடிகை திட்டவட்டம்

    நடிகை அளித்த பாலியல் புகார் வழக்கை ரத்து செய்ய கோரும் சீமானின் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ள நிலையில்,சீமான் உடன் பேசி தீர்வுகாண தயாராக இல்லை, என நடிகை தரப்பில் கூறப்பட்டு, பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை என்று கூறப்பட்டுள்ளது. இதனால் நடிகை தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய நான்கு வாரம் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,



  • Jul 21, 2025 14:13 IST

    சிலை கடத்தல் வழக்கு தொடர்பான எதுவும் பேச கூடாது: நீதிமன்றம் உத்தரவு

    சிலை கடத்தல் வழக்கு தொடர்பான பொன் மாணிக்கவேலுக்கு, கூடுதல் ஜாமீன் நிபதந்தனைகளை விதிக்க வேண்டும் என்று சி.பி.ஐ தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சிலைக்கடத்தில் வழக்கு தொடர்பான ஊடகங்களிடம் எதையும் பேசக்கூடாது என்று பொன் மாணிக்கவேலுக்கு தடை விதித்துள்ளது,.



  • Jul 21, 2025 13:50 IST

    நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய தலைமைச்செயலாளர்

    கருணை அடிப்படையில் வேலை வழங்கும் உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில், தலைமை செயலாளர் முருகானந்தம், முன்னாள் தலைமை செயலாளர் சிவதாஸ்மீனா நீதிமன்றத்தில் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த ஏற்பட்ட தாமதத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். தலைமைச்செயலாளர் மன்னிப்பை ஏற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது. தலைமை செயலாளர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, மகிழ்ச்சி கொள்ளவில்லை, தர்ம சங்கடம்தான் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



  • Jul 21, 2025 13:15 IST

    அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் அனுமதி

    சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான நடைபயிற்சியின்போது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சருக்கு தேவையான மருத்துவ பரிசோதனை நடந்து வருவதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் அன்வர் ராஜாவை கட்சியில் சேர்த்த நிகழ்வுக்கு பிறகு முதலமைச்சர் மருத்துவமனைக்கு சென்றார்.



  • Jul 21, 2025 13:01 IST

    தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

    தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, தேனி, தென்காசியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.



  • Jul 21, 2025 13:01 IST

    எதிர்க்கட்சியினர் பேச அனுமதி மறுப்பு – ராகுல் காந்தி

    நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அனுமதி மறுக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவையில் ஆளும்கட்சி உறுப்பினர்களை மட்டுமே பேச அனுமதிக்கப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவரான என்னையே பேச அனுமதிக்கவில்லை. எங்களை பேசவிட்டால் தானே விவாதம் நடக்கும் என்று கூறினார்.



  • Jul 21, 2025 12:55 IST

    ரஷ்யாவால் போருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடலூர் மாணவர்: மத்திய அரசு நடவடிக்கை எடுக்க அன்புமணி வலியுறுத்தல் 

    ரஷ்யாவால் கட்டாயமாக போருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடலூரைச் சேர்ந்த மாணவர் கிஷோரை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க தலைவர் அன்புமணி அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "மருத்துவம் படிக்கச் சென்ற இடத்தில் ஆபத்து: ரஷ்யாவின் உக்ரைன் போருக்கு கட்டாயமாக அனுப்பப்பட்ட தமிழக மாணவரை மீட்க வேண்டும்.

    ரஷ்யாவில் மருத்துவப் படிப்பை படித்து வந்த கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலை அடுத்த  பாளையங்கோட்டை கீழ்ப்பாதியைச் சேர்ந்த  கிஷோர் என்ற மாணவர்,  ரஷ்ய இராணுவத்தில் கட்டாயமாக சேர்க்கப்பட்டு, உக்ரைன் நாட்டுடனான போரில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக அவரது  குடும்பத்தினர் தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

    ரஷ்யாவில் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் போதே பகுதி நேர வேலை செய்த போது, தடை செய்யப்பட்ட பொருளை வினியோகம்  செய்ததாக அவரும், சக தமிழ் மாணவர் நித்தீஷ் என்பவரும் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இப்போது  தங்களை  உக்ரைன் போரில் ஈடுபடுத்த அழைத்துச் செல்வதாக பெற்றோருக்கு கிஷோர்  அனுப்பியுள்ள செய்தி தான் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

    படிப்புக்காக ரஷ்யா சென்ற மாணவர்களை  போரில் ஈடுபடுத்த ரஷ்ய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை.  வெளிநாட்டு மாணவர்களுக்கு கல்வி வழங்குவதற்கான பன்னாட்டு  ஒப்பந்தங்களுக்கு இது எதிரானது. ரஷ்யாவின் இந்த செயலால்  பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களின் பெற்றோர் மட்டுமின்றி, ரஷ்யாவில் மருத்துவம் படிப்பதற்காக தங்களின்  பிள்ளைகளை அனுப்பியுள்ள ஆயிரக்கணக்கான பெற்றோரும் கவலையில் ஆழ்ந்திருக்கின்றனர்.

    ரஷ்ய ராணுவத்தில் கட்டாயமாகச் சேர்த்து உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இந்தியர்கள் 80 பேர்  பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முயற்சியால் கடந்த ஆண்டு மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டனர். அதேபோல், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிஷோர் என்பவர் உள்ளிட்ட மாணவர்களையும் மீட்டு தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்." என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 



  • Jul 21, 2025 12:44 IST

    தவெக தலைவர் விஜய் மற்றும் தொண்டர்கள் மீது புகார்

    தவெகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த வைஷ்ணவி தவெக தலைவர் விஜய் மற்றும் தொண்டர்கள் மீது புகார் அளித்துள்ளார். தவெக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் கேலி சித்திரம் பதிவிடுவதாகவும், இதனை கண்டித்து அறிக்கை வெளியிடாததால் விஜய் மீதும் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 



  • Jul 21, 2025 12:39 IST

    2025ம் ஆண்டு செஸ் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும் என்று FIDE அறிவிப்பு

    2025ம் ஆண்டு செஸ் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும் என்று FIDE அறிவித்துள்ளது. அக்டோபர் 30ம் தேதி முதல் நவம்பர் 27ம் தேதி வரை செஸ் போட்டிகள் நடைபெற உள்ளன. செஸ் உலகக்கோப்பை போட்டி நடைபெறும் நகரம் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.



  • Jul 21, 2025 12:32 IST

    எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு

    எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழக்கத்தால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் விளக்க தர வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றது பற்றி விவாதிக்க வேண்டும். மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளே மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு வருகின்றனர்.



  • Jul 21, 2025 12:27 IST

    பசு என்றால் பசுதான்...பிரித்து பார்க்க என்ன வேண்டி உள்ளது? - உச்சநீதிமன்றம்

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாட்டு பசுவின் பாலில் அபிஷேகம் செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். பசு என்றால் பசுதான் அதில் என்ன பிரித்து பார்க்க வேண்டி உள்ளது?. கடவுள் மீதான உண்மையான அன்பு என்பது சக மனிதர்களுக்கும், உயிரினங்களுக்கும் சேவை செய்வதில்தான் உள்ளது; இதுபோன்ற விவகாரத்தில் அல்ல என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 



  • Jul 21, 2025 12:19 IST

    அரசியல் சண்டைக்கு அமலாக்கத்துறையை பயன்படுத்துவதா என உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

    அரசியல் சண்டைக்கு அமலாக்கத்துறையை பயன்படுத்துவதா என உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.



  • Jul 21, 2025 12:16 IST

    மக்களவை கூட்டத்தொடர் - மல்லிகார்ஜுன் கார்கே கேள்வி 

    பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் நிலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மாநிலங்களவையில் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார். "பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளான நாங்கள் அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினோம். இந்த சம்பவம் குறித்து, குறிப்பாக ராணுவத் தலைவரும் அரசாங்கமும் ஒப்புக்கொண்ட புலனாய்வுத் தோல்வி குறித்து, அரசாங்கத்திடம் விளக்கம் அளிக்க வேண்டும்" என்று அவர்  கோரினார்.

    மேலும், ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்வது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்துக்கள் குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். "வெளிநாட்டவர் ஒருவர் இதுபோன்ற கூற்றுக்களை வெளியிடுவது தேசத்திற்கு அவமானம்" என்றும் அவர் கூறியுள்ளார். 



  • Jul 21, 2025 12:10 IST

    செப்டம்பர் மாத இறுதிக்குள் சாலைப் பணிகளை முடிக்க மாநகராட்சி உத்தரவு

    சென்னையில் செப்டம்பர் மாத இறுதிக்குள் சாலைப் பணிகளை முடிக்க மாநகராட்சி உத்தரவு அளித்துள்ளது. சென்னையில் கடந்த மாதம் தொடங்கப்பட்ட சாலைப் பணிகளில் 25% நிறைவு பெற்றுள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.



  • Jul 21, 2025 11:46 IST

    தக்காளி விலை - ஒரே நாளில் ரூ.15 உயர்வு

    சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளியின் விலை ஒரேநாளில் 15 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில்,  இன்று 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. 



  • Jul 21, 2025 11:46 IST

    காஷ்மீரில் வைஷ்ணவ தேவி கோயில் செல்லும் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழக பக்தர் உயிரிழப்பு

    காஷ்மீரில் வைஷ்ணவ தேவி கோயில் செல்லும் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழக பக்தர் உயிரிழந்தார். அரக்கோணத்தை சேர்ந்த குப்பன் சீனிவாசன்(70) என்பவர் உயிரிழந்தார். காயமடைந்த அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மழை காரணமாக கத்ராவில் இருந்து செல்லும் பாதையில் பங்கங்கா என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.



  • Jul 21, 2025 11:44 IST

    நீதிபதிகள் எச்சரிக்கை 

    மத போதகர் தாக்கப்பட்ட வழக்கில் தி.மு.க முன்னாள் எம்.பி ஞான திரவியத்திற்கு சம்மன் வழங்காத விவகாரத்தில் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  சம்மன் வழங்க ஆறு மாதங்கள் எடுத்துக்கொண்டது ஏன்? என்றும் எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு சம்மன் வழங்க இயலாவிட்டால் தனிப்பிரிவு அமைக்க உத்தரவிட நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 



  • Jul 21, 2025 11:43 IST

    "யு.பி.ஐ பரிவர்த்தனைகள் புதிய உச்சம்" - பிரதமர் மோடி

    "பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வருகிறது இந்தியா. 25 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். நாட்டில் விலைவாசி குறைந்து மக்களின் வாழ்க்கை எளிமையாகியுள்ளது. யு.பி.ஐ பரிவர்த்தனைகள் புதிய உச்சம் தொட்டுள்ளன; மக்கள் பணம் மக்களுக்கே என்பதே பா.ஜ.க ஆட்சியின் நோக்கம். காங். ஆட்சியில் ரூ.1 ஒதுக்கப்பட்டால் 15 பைசாதான்மக்களை சென்றடைந்தது. ஜன் தன் வங்கி கணக்கு மூலம் மக்கள் பணம் நேரடியாக மக்களுக்கு செல்கிறது" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 



  • Jul 21, 2025 11:36 IST

    "முடிவை நோக்கி நக்சல்வாதம்" - பிரதமர் மோடி

    "பயங்கரவாதத்தின் இலக்கை ஆபரேஷன் சிந்தூர் மூலம் தகர்த்துள்ளோம், இந்திய ராணுவத்தின் சக்தியை காட்டுகிறது ஆபரேஷன் சிந்தூர் நம் ராணுவத்தின் 100 சதவீத வெற்றியை  ஆபரேஷன் சிந்தூர் பறைசாற்றுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு ஆயுதங்களால் புதிய ஊக்கம், நக்சல்வாதம் முடிவை நோக்கி சென்றுகொண்டு உள்ளது" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 



  • Jul 21, 2025 11:31 IST

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடக்கம்

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது, காங்கிரஸ் முன்னாள் எம்.பி குமரி அனந்தனுக்கு மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 

     



  • Jul 21, 2025 11:27 IST

    2006 மும்பை ரயில் குண்டு வெடிப்பு - 12 பேரும் நிரபராதிகள்: ஐகோர்ட் தீர்ப்பு 

    2006 மும்பை ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 189 பேர் உயிரிழந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய 5 பேருக்கு மரண தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் கடந்த 2015 ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்த‌துஇந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 12 பேரையும் விடுதலை செய்து, மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



  • Jul 21, 2025 11:22 IST

    மழையால் விவசாயிகள் பயன்பெறுவர் - மோடி பேச்சு 

    "நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது; நாட்டில் விவசாயப் பணிகள் துரிதம் அடைந்துள்ளன. நல்ல மழை பெய்து வருவதால் விவசாயிகளுக்கு நல்ல பயன் கிடைக்கும்; மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக நடைபெறும் என நம்புகிறேன்" என்று  பிரதமர் மோடி கூறியுள்ளார். 



  • Jul 21, 2025 11:18 IST

    அ.தி.மு.க கொள்கையில் தடம்புரண்டு பா.ஜ.க கையில் சிக்கி இருக்கிறது: தி.மு.க.வில் இணைந்த அன்வர் ராஜா பேட்டி 

    அ.தி.மு.க தன்னுடைய கொள்கையில் இருந்து தடம்புரண்டு, பாஜகவின் கையில் சிக்கி இருக்கிறது என்று தி.மு.க-வில் இணைந்தபின் அன்வர்ராஜா பேட்டி அளித்துள்ளார். 



  • Jul 21, 2025 10:50 IST

    இன்று முதல் தமிழில் வெளியாகத் தொடங்கிய நாடாளுமன்ற அலுவல் பட்டியல்!

    நாடாளுமன்ற அலுவல் பட்டியல் இன்று முதல் தமிழில் வெளியாகத் தொடங்கியது. மக்களவை அலுவல்கள் குறித்த நிகழ்ச்சி நிரல் பட்டியல் தமிழில் வெளியானது. தொடர் வலியுறுத்தல் காரணமாக நாடாளுமன்ற அலுவல் பட்டியல் இன்று முதல் தமிழில் வெளியாகத் தொடங்கியுள்ளது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வெளியிடப்பட்டு வந்த நாடாளுமன்ற அலுவல் பட்டியல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 10 மொழிகளில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.



Tamilnadu News Latest news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: